Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ.சேகர் சாடல்

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ. சேகர் சாடல்

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடி யாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ. சேகர் சாடல்

விஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை!

இன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை

மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலச வே இந்த பதிவு

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜய காந்த் ஆவார்.

சினிமாவிற்குண்டான சில இலட்ச ணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின் னணி இல்லை. இத் தனைக்கும் அந்த நேரத்தில் ரஜி னியும் கமலும்மசாலா படங்களின் மூலம் கோலோச்சி ய காலம். நெடிய போ ராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொரு படத்தின் மூ லம் அறிமுகம் ஆனா ர். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநிலமொழி திரைப் படத்திற்கான தேசிய விரு தினை பெற்ற படமாகும். எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கத்தில்இவரி ன் வெற்றிநடை ஆரம்பம் ஆனது.

அந்த காலகட்டத்தில் ஓடும் குதி ரையில்(இயக்குனர்) தான் ரஜினி யும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களி ன் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்த அனைத்து படங்களும் சக்கை போடுபோட்டன. திரைப் பட கல்லூரி மாணவர்களுக் கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர். வி. உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்தி ருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ் ந்தார்.

இயக்குனர்கள் மட்டுமல்ல. இவர்மூலம் அறிமுகம் செய் யப்பட்ட / ஒத்துழைப்பு அளி க்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவு த்தர், நடிகர் சரத்குமார், கசா ன்கான், அருண்பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலி கான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன்? கடந்த  தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடி வேலு கூட இவரால் வளர் ந்தவரே. அறிமுகம் வேண் டுமானால் ராஜ் கிரணாக இருக்கலாம்.

ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த் தான். சின்னகவுண்டர் படத்தி ல் கவுண்டமணியால் ரிஜெக் ட்செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப் படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்ட மணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தே ர்வாக அமைந்தவர். விஜயகாந்த்தான். இவரின் நிர்வா கத்திறமையை சிலர் குறை த்து மதிப்பிடுகின்றனர்.

பல ஆண்டுகளாக கடனில் தவி த்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட நடிக ர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது ம் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமி ன்றி கையிருப்பையும் அதிகப்படுத்தி னார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாரா ட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் தொலைக்காட்சி நிர்வாக மும் சிறப்பாக இருந்து வருகிறது. அரசியலுக்கு வருவேன் என  பூச்சா ண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அ திலும்காலூண்றி சாதித்தவர் விஜ யகாந்த். ஜெயலலிதா, கருணா நிதி போன்ற பழம் தின்றுகொட்ட போட் டவர்கள் மத்தியில் யாதொரு அனு பவமும் இன்றி தனி ஆளாக இவரி ன் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகை யையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதி ல்லை. இவரி ன் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவ ர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநி திக்கு ஒரு எம் ஜியார்போல எம்ஜியாருக்கு ஒரு ஜெய லலிதா, நிர்மலா போல நடி கர் பட்டாளம் எதுவும் கிடை யாது.

எவருடனும் கூட்டணி இல் லாமல் இவர் வாங்கிய ஓட் டுக்கள் அரசியலில் ஜாம்ப வானாக அறியப்பட்ட வை கோவையும் கலங்கவைத்த து. மற்ற அரசியல் தலைவர் கள் போலல்லாமல் இவரின் வெளிப்படையான, கள ங்கமில்லாத பேச்சு ஒரு சிலருக்கு கசப்பாக இருக் கும் இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுக ள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப் பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்க ளை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோப மும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக் காரர்களுக்கு கேலிச்சித்திரமானார்.

இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பய னடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாடமாட்டேன் எனவும் மகனுக் கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளி த்தவர் இவர். இவருக்கு அரசியலுக்கு வரவேண்டுமெ ன்று எண்ணம் இல் லாத போதே மக்களுக்கு பல உதவிகளை செய்து பழக் கப்பட்டவர். தினமும் அன்னதானம், தையல் மிஷின், என்று இவரை பார்த்து மற்ற நடிகர்களும் செய்கிறார்கள்.

எங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவார ண நிதி அறிவிப்பதும் அளிப்பதும் விஜயகாந்த் மட்டு மே..  கார்கில் நிவாரணநிதி, குஜராத் நிவாரண நிதி, சு னாமி நிவாரண நிதி. கும்பகோணம் தீ விபத்து என்று சொல்லிக்கொண்டே போகலாம்..இப்போது (10-09- 2014)கூட காஷ்மீர் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார்

என்ன துயரமான சம்பவம் நடந்தாலும் உடனே உதவித் தொகை அறிவிக்கும் மற்ற நடிகர்கள் அதை ஒழுங்காக கொடுக்கின்றார்களா என்றால்?..அந்த கடவுளுக்கே வெளிச்சம்! உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? பத்து வருடங்களுக்கு முன்னாள் கும்ப கோணம் பள்ளியில் தீயில் கருகியமொட்டுகளை! சம் பவத்தை  கேள்விப் பட்டதும் துடித்துபோய் (நடித்துப் போய்) ஆறுதலும் சொல்லி உதவித்தொகை அறிவித் தார்கள்… சில நடிகர்கள்நேரில் சென்றார்கள் அவர்களைகூடபாராட்டலாம்.. என்னை வாழவைக்கும் தெய்வங்க ளாகிய தமிழ் மக்கள் என்று சொ ல்லிக்கொள் ளும் ரஜினி என்ன செய்தார்? அந்த விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொ டுத்துகதறியவர், யார் தெரியுமா ?.. ரஜினிரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ்! அவர் வெளிப்படையாக பத்திரிகைகளில் குறைபட்ட பிறகே இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது எ ன்று தனது மனைவியை அனுப்பி வைத்தார்! உதவி தொகையும் அறிவித்தார்.. ஆனால் நீண்ட நாட் களாக கொடுக்காமல் அதைப்பற்றி பத்திரிக்கையில் வரவும் முறையா ன விபர ங்கள் இல்லையெ ன்று மீண்டும் அவ ர்களை வரவழை த்து விபரங்கள் கே ட்டார் கள்..

ஆனால் கிடைத்ததா இல்லையென்று அந்த பெற்றவர் களுக்கே வெளிச்சம்! ரஜினி மட்டும் இல்லை கமல் 12 லட்சம்! விஜயகாந்த 10 லட்சம்! சூர்யா.. விஜய்.. சரத்.. இப்ப‌டி அனைவருமே அறிவித்தனர்! ஆனால் இது வரை உள்ள விபரங்கள் படி விஜயகாந்த், சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றேதெரிகிறது! இல்லை கொடுத்துவிட்டார்கள் என் றால் தெரிந்தவர்கள் சொல்லவும்.. விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செ ய்யப்பட்டது என்பதே உண்மை..

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவ ரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்ற னர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்.. இதை பகிருங்கள்
.

.

= திரு. எஸ்.வீ.சேகர் அவர்கள், திரு. விஜயகாந்த் பற்றி முகநூலில் தெரிவித்த கருத்து இது (ப‌டங்கள் – கூகுள்)

Mr. Vijayakanth in Mr.S.V.Sekar Son’s Reception,

 

Leave a Reply