சமையல் குறிப்பு – கடம்பா கொத்துக்கறி கோஸ்
சமையல் குறிப்பு – கடம்பா கொத்துக்கறி கோஸ்
தேவையானவைகள்:-
கொத்துக்கறி – கால் கிலோ
முட்டை கோஸ் – கால் கிலோ
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்
– 2 பெரியது
தக்காளி – 2
மிளகாய் -1
தயிர் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டுபேஸ்ட்–2டீஸ்பூன்
கரம்மசாலா –கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் –அரைஸ்பூன்
குழம்புமசாலாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு –4
மல்லி இலை- சிறிது
உப்பு – தேவைக்கு
செய்முறை:
கறியை சுத்தம்செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொ ள்ளவும். கோஸ், வெங்காயம், மல்லி, தக்காளி கட்செ ய்து கொள்ளவும்.தேங்காய்,முந்திரி அரைத்து கொள்ள வும். குக்கரில் எண்ணெய்விட்டு அது காய்ந்ததும் வெ ங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, சேர்த்து வதக்கவும், பின்பு தக்காளி, மல்லி, மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டவும்.
கறியை சேர்க்கவும், தயிர், மிள காய்த்தூள், மசாலாத் தூள் சேர் த்து பிரட்டி குக்கரை மூடி 3 விசி ல் வைக்கவும். ஆவி அடங்கிய தும் குக்கரை திறந்து முட்டைகோஸ் சேர்த்து, தேங்கா ய் விழுது சேர்த்து உப்பு பார்த்து குக்கரை மூடி 1 விசில் வைத்து இறக்கவும்.
சுவையான கடம்பா கொத்துக்கறி கோஸ் தயார், பின் என்ன ருசிங்க, பிறர் ருசிக்க கொடுங்க. . .
=>ஆசியாபேகம்