Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! (சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள்)

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! -சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள்

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! -சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள்

2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை

உயர்த்தவில்லை என்றாலும், சிற்சில வகையில் வரிச் சலு கைகளை வழங்கி நடுத்தர வர்க்கத்தினரிடம் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடு த்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமானவரி வர ம்பில் ரூ.50,000, 80சி பிரிவுமுதலீட்டில் ரூ.50,000, வீட் டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.5 லட்சம் ரூபாய் க்கு சலுகைகளை அறிவித்தா ர். அந்த வகையில் அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சத் திலிருந்து குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாகவாவது உயர்த்துவா ர் என மாதச் சம்பளக்காரர்கள் பெரிதாக எதிர்பார்த்தனர். ஆனால், வருமானவரி வில க்கு வரம்பு உயர்த்த ப்படாதது மாதச் சம்பளதாரர்களு க்குப் பெரும் ஏமாற்ற த்தை அளித்துள்ளது.

வருமான வரிவிலக்கு உச்ச வர ம்பில் மாற்றமில்லை என்றாலு ம், பெண் குழந்தைகள் சேமிப்பு த் திட்ட வரு மானத்துக்கு வரிச் சலுகை, போக்குவரத்துப் படிக் கான சலுகை தொகை இரு மட ங்காக உயர்வு, புதிய பென் ஷன் திட்டத்தில் கூடுதல் சலுகை, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியச் சலுகை உயர்வு என சில வரிச்சலுகைகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்விவரம் வரு மாறு:

பென்ஷன் முதலீட்டுக்கு கூடுத ல் சலுகை!

80சிசிசி பிரிவின் கீழ் இன்ஷூர ன்ஸ் நிறுவனங்களின் பென்ஷ ன் திட்டங்களில் மேற்கொள்ளப் படும் முதலீட்டுக்கு ரூ.50,000 கூடுதலாக வரிச் சலுகை அளிக் கப்படும். அதாவது, முதலீட்டு வரம்பு ரூ.1 லட்சத்தி லிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 80சிசிடி பிரிவின்கீழ் தேசிய பென்ஷன் சிஸ்டம் மூல ம் செய்யப்படும் முதலீட்டில் கூடுதலாக ரூ.50,000-க்கு வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளது.

சொத்து வரி நீக்கம்!

ரூ.30 லட்சத்துக்குமேல் நிகர சொத்து மதிப்பு இருந்தா ல், அதற்கு சொத்து வரி, சொத்து மதிப்பில் 1% வரி வசூ லிக்கப்பட்டது.

2013-14-ம் ஆண்டில் இந்த வரி வசூல் ரூ.1,008கோடியாக இருந் தது. ஆனால், அதற்காக மத்திய அரசு செல விட்ட தொகை அதை விட அதிகம். அதனால் அந்த வரி யானது நீக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள் ளார்.

இதற்கு பதில், ரூ.1 கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு வரு மானம் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு (சூப்பர் ரிச்) கூடுதலாக சர்சார்ஜ் 2% வி திக்கப்படுகிறது. இந்த 2% கூடுதல் சர்சார்ஜ் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலா க ரூ.9000 கோடி வருமா னம் கிடைக்கும்.

குறிப்பு: இந்த 2%சர்சார்ஜ்- ஐ சேர்த்தால் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டுக்கு சம்பாதி க்கும் பெரும் பணக்காரர்கள் மொத்தம் 12% சர்சார்ஜ் கட்ட வேண்டும்.

ரியல் எஸ்டேட்!

* உள்நாட்டில் கறுப்புப் பணப் புழ க்கத்தைக் குறைக்க மற்றும் கட்டு ப்படுத்த நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பினாமி பரிமாற்றம் (தடுப்பு) மசோ தா கொண்டு வரப்படும். இதன்மூலம் ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப்பணப்புழக்கம் கட் டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை அசூர வேகத் தில் வளரக் காரணம் கறு ப்புப் பணம் இந்தத் துறையில் புகுந்ததுதான். இதனால் மனைகளின் விலை ஏகத்துக்கும் உயர்ந்த தால், சாதாரண மக்கள் மனை வாங்க முடியவில்லை.

* வெளிநாட்டில் சொத்து இருக்கும் விவரங்களைக் குறிப்பிடவில்லை என்றால் 7 ஆ ண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், 300% அபராதம் விதிக்கப்படும்.

*அசையாச்சொத்து வாங்கும்போ து ரூ.20,000க்கு மேற்பட்ட தொ கையை ரொக்கப் பணப் பரிமாற்றம் செய்ய தடை விதி க்கும்விதமாக இந்திய வருமான வரிச்சட்டம் திருத்தப் பட இருக்கிறது.

* சொத்தை வாங்காமலே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெ ன்ட் டிரஸ்ட் மற்றும் இன்ஃப்ரா இன்வென்ஸ்ட்மென்ட்ஸ் டிரஸ் ட்களுக்கு மூலதன ஆதாய வரிச் சலுகை அளிக்கத் திட்ட மிடப் பட்டுள்ளது.

* சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டான 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலு ள்ள அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற் ற முயற்சி எடுக்கப்பட இருக் கிறது.

செல்வ மகள் திட்டத்துக்கும் வரி இல்லை..!

*பெண்குழந்தைகள் பெயரில் முதலீடுசெய்யும் செல்வ மகள் (சுகன்யா சம்ரிதி) திட்டத்தில் வட்டிக்கும் இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆண்டுக்கு 9.1% வட்டி வரு மானம் அளிக்கும் இந்தத் திட்டம், பிஎஃப் மற்றும் பி  பி எஃப்-ஐவிட கவர்ச்சிகரமான தாக மாறியிருக்கிறது.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு (80 டிடி)!

வருமானவரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல் பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக் கான மருத்துவச் செலவில் ரூ. 50,000 வரை வருமான வரிச் சலுகை தற்போது இருக்கிறது. இதில் கூடுதலாக ரூ. 25,000 மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக் கப் படுகிறது.

உடல் ஊனமுற்ற வரிதாரர் (80யூ)!

வருமான வரி கட்டுபவர் ஊன முற்ற வராக இருந்தால், ரூ.50,000 வரிச் சலுகை இருக்கிறது. இதில் கூடுதலாக ரூ.25,000 மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்க ப்படுகிறது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் (80 டி)!

*மருத்துவ காப்பீடு பிரீமியத்து க்கான வரிச் சலுகை ரூ.15,000-லிருந்து இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட் டுள்ளது.

* மூத்த குடிமக்களுக்கு இந்தச் சலுகை ரூ.20,000-லிரு ந்து ரூ. 30,000-ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் அதிக மருத்துவமனைச் செலவை சமா ளிக்க முடியும்.

* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக் காத 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 வரை யிலான மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: