Monday, February 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா?- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா? – கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை

வந்திருக்கும். நாம்மாலையிலோ (அல்) மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும்கூட “ஸ்டாக் இல்லை ” என்றுசொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக்கொள் ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக :-
PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 91764 80216 ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்உடன் ரேஷன் கடையில் பொருள் வாரி யானஅன்றைய சரக்கிருப்பு விவரங்களைப்பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறி யீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும். அதுபோல் BE014என்ற கடைகுறியீடு (shop code)தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்க ப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ்.பதிவுசெய்யவேண்டும்.

குடும்பஅட்டை எண்ணில் முதல்இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/ 0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடுகுடும்பஅட்டை எண்ணி ல் உள்ளது. எனவே, அந்தகுறியீட்டு எண் ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத் தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடன டியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

=> Mani Kick

Leave a Reply