Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திராவிட கட்சிகள் திருந்துமா?

திராவிட கட்சிகள் திருந்துமா?

2015 மார்ச் மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்!

திராவிட கட்சிகள் திருந்துமா?

வ‌டக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. – என்று திராவி டக் கட்சிகள் சொல்வதில் உண்மை இருக்க‍த்தான் செ ய்கிறது. அரசியலுக்குப்பால்

அன்பு பாராட்டுவதில்… கட்சிகளைத் தாண்டி கண்ணி யம் காப்பது.. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாய் பார்க்காம ல் பழகுமல் … போட்டியை பொ றாமையை மாற்றாததில்.. பொது இடங்களில் நாகரீகம் பேணுவது… நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வடக்கு வாழ்கிறது.

ப‌ரம எதிரிகளான லாலுவும் நிதிஷும் இன்று ஒன்றாய் ஓர ணியில்! முரண்டு பிடிக்கும் முஃதி முகமது கட்சியும் அவ ரோடு முரண்பாடுகளுள்ள‍ மோடிக் கட்சியும் இன்று காஷ் மீர் ஆட்சி கட்டிலில்! வெற்றிப் பெற்ற கெஜ்ரிவாலுக்கு தோற்றுப்போன கிரண்பேடி உடனே வாழ்த்துத் தெரிவி க்கிறார். சாக்குபோக்கு சொல்லா மல் கெஜ்ரி வாலுக்கு பிரதமர் உட னே ஆதரவு தெரிவித்த‍தோடு, அவ ருடைய உடல்நலத்துக்காக சிறந் த மருத்து வரையும் சிபாரிசு செய் கிறார்.

அன்றைய போட்டியாளரும் இன்றைய பிரதருமான மோடி, தன்னை எதிர்த்து வெளியேறிய நிதிஷ்குமா ருக்கு வாழ் த்துத் தெரிவிக் கிறார். முலாயம்சிங் வீட்டு விழா ஒன்றில் லாலுவும், மோடியும் முலாயமும்  ஒ ன்றாய் சிரித்து மகிழ்கின்றனர். மத்தியஅரசின் எல்லா விழாக்களிலும் எதிர்க்கட்சித்தலைவர்கள் சகஜமாய் பங்கேற்கின்றனர். நாடாளுமன் ற அவயில் ஒருவருக் கொருவர் கைக்குலுக்கி நலம் விசாரிக்கின் றனர். சோனியாவும், சுஷ்மாவும் அன்போடு கட்டிக் கொள்கி ன்ற னர்.

ஆனால், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் நி லைமை என்ன? ஒருதாய்வயிற்றில்பிறந்த 2 கழகக் கண்மணிகளும் வெவ்வேறுகிர வாசிகள்போலல்லவா முட்டிக் கொள்கின்றனறனர். மோதிக் கொள்கின்றனர். தலைவர்களு க்குள் நலவிசாரிப்பு உண்டா? வெற்றிப் பெற்றால், வாழ்த்தும் மனமுண்டா? தோல்வியை சகித்துக்கொள்ளும் தைரி யமுண்டா? பொது இடங்களில் சந்திக்க வாய்ப்புண்டா ?அப்படியே வாய்ப்பு இருந்தா லும் பேசுவதற்கு திராணியு ண்டா?

தமிழுக்கு விழா என்றாலும், தங்களை உருவாக்கிய பெரி யார், அண்ணாவற்கு விழா என்றாலும் தனித் தனி யாக அல்ல‍வா விழா எடுக்கின்றனர். காமராசரின் வழி வந்தவர்களை கேட்கவே வேண் டாம். கட்சி வேறாக விழா எடுக்கா மல் கோஷ்டி கோஷ்டியாக விழா எடுக்கும் அவலம் இங்கு மட்டுந் தான்.

யார் முதல்வராயிருந்தாலும், அவர் 234 தொகுதிகளு க்கும் முதல்வர் … யார் அமைச்ச‍ராயிருந்தாலும் அவர் எல்லா கட்சியினருக்கும் எல்லா தொகுதிகளுக்கும் அமைச்ச‍ர் என்கிற அடிப்ப டை அறிவு இங்குள்ள திரா விடக் கட்சிகளுக்கு இல் லாமல் போனது எப்ப‍டி? இன்றைய கழகங்க்ளின் பிறப்பிடமான திராவிடக் கழகமே நொந்துபோய் விமர்சிக்கிற அளவிற்கு திராவிட கழகங்களின் அரசியல் நாகரீகம் அதளபா தாளத்திற்குள் விழுந்துவிட்டது.

க‌டமை-கண்ணியம் -கட்டுப்பா டு என்றுசொல்லி தமிழகத்தை தனதாக்கிக்கொண்ட திராவிட க் கட்சிகள் வடக்கு வாழ்கிறது. என்று வாய்க் கிழியபேசினா ல் மட்டும் போதாது வடக்கைப்போல் வாழ வேண்டும் வடக்கிலுள்ள தலைவர்களைப்போல் பண்புகொள்ள‍ வேண்டும்.

திராவிடக்கட்சிகள் திருந்தா விட்டால், தமிழன் என்று சொல் ல‍டா, தலை குனிந்து செல்லடா என்றுதான் சொல்ல வேண்டியி ருக்கும் என்பதே உரத்த‍ சிந்த னையாளர்களின் உள்ள‍க்குமறல்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் 

கைபேசி 94440 11105

(நம் உரத்த‍ சிந்தனை)

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\|

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: