Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்-22.3.15- பெண் இனமே இப்படித்தானோ ????

அன்புடன் அந்தரங்கம்-22.3.15- பெண் இனமே இப்படித்தானோ ????

அன்புடன் அந்தரங்கம்-22.3.15- பெண் இனமே இப்படித்தானோ ????

அன்புள்ள அம்மா —

என்வயது, 42; என்மனைவி வயது, 34. திருமணம்ஆகி, 13ஆண்டுகள் ஆகிறது. எங்களுடையது பெண்வீட்டார் மட்டும் ஏற்றுக் கொண்ட, காதல் திருமணம். ஆண், பெண் என, இரு

குழந்தைகள். தம்பதி என்றால், இப்படி த்தான் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பார்ப்பவர் பொறாமைப்படும் அளவுக்கு, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.

எனக்கு வாசிக்கத் தெரிந்தது முதல், நான், ‘வாரமலர்’ இதழ் வாசகன். ‘அன்புடன் அந்தரங்கம்’ பகுதியை படித் துத் தான், வாழ்க்கையில் என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதை, சிறு வயது முதலே கற்றவன். என் மனைவியையும், இப்பகுதியின் ரசிகையாகவே ஆக்கி விட்டேன்.

என் வீட்டார் மற்றும் என் மனைவி வீட்டார் தொடர்பு இல்லாத பொதுவான ஒரு கிராமத்தில் நாங்கள் வசித் து வருகிறோம். என் மனை வி, ஒரு வெகுளி; எல்லாரி டத்திலும் கலகலப்பாக பேசுபவள். எங்கள் கிராமத் தில், வெளிநாடு சென்று திரும்பிய ஒரு வாலிபனோடு அடிக்கடி போனிலும், நேரிலும் பேசுவாள்.

அவனும் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்ததாக கூறி, என் மனைவிக்கு சேலை, குளியல் சோப்பு, பவுடர், சென்ட் பாட்டில், தலைவலி தைலம், என் குழந்தைக ளுக்கு வாட்ச், தலைக்கு தேய்க்கும் ஆயில் என கொடு த்தான். இவளும் வாங்கி, இன்று வரை பயன்படுத்தி வருகிறாள். நான், இதுபற்றிகேட்டதற்கு, ‘அவன் வெளி நாடு போகும்போது, எல்லாரும் அவனிடம் பணம் கொ டுத்தனர். அதனால், நானும், 1,000 ரூபாய் கொடுத்தே ன். அவர் ஒன்றும் சும்மா இதை கொடுக்கவில்லை…’ என்று கூறினாள்.

அவனுக்கு, 35 வயது இருக்கும்; திருமணம் ஆனவன்; மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது வெளி நாட்டிலிருந்து வாரம் இரண்டு மூன்று முறை, என் மனைவியோடு பேசுவான். நான் வீட்டில் இருக்கும் நேரம் அளவாகவும், நான் இல்லாத நேரம் அளவில் லாமலும், இவர்கள் அரட்டை தொடர்ந்துள்ளது.

யாருமே சந்தேகப்படாதவாறு, இருவரும் பேசியும், பழ கியும் வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், என் மனைவிக்கு, ‘டச் மொபைல்’ வாங்கிக்கொடுத்தே ன். அதில், ‘இன்கமிங்’ கால்கள் தானாகவே பதிவு ஆகு ம் வசதி உள்ளது. அந்த போனை, வாங்கி கொடுத்த அன்றே, எங்கள், 13 ஆண்டு கால சந்தோஷமான வாழ் க்கைக்கு வேட்டு வந்து விட்டது.

போன் வாங்கிய மூன்று மணி நேரத்தில், தற்செயலா க அவன், என் மனைவிக்கு போன் செய்ய, இவள் சந்தோ ஷமாக, ‘என் கணவர் எனக் கு, ‘டச் ஸ்கிரீன்’ மொ பைல் வாங்கி கொடுத்திருக்கிறார். அதில் தான் இப்போது உன்னிடம் பேசிக்கிட்டிருக்கே ன்…’ என்று கூற, அவன் மறுமுனையில், ‘பரவாயில் லையே… நான் வாங்கி தாரேன்னு சொன்னவுடனே அவர் வாங்கி தந்துட்டாரா…’ என்று கூற, பதிலுக்கு இவள், ‘இதில நாம் பேசுறது எல்லாம் ரிக்கார்டு ஆகும்; எனக்கு அத அழிக்க தெரியல. நீ என்னோட இன் னொரு போனுக்கு பேசு, அது, டப்பா போன்…’ என்று கூற, பதிலுக்கு அவன், ‘என்னது… டெலீட் செய்ய தெரியலயா… போடி லூசு; மூணு பட் டன் இருக்கும் பாரு…’ என்ற இவர் களது உரையாடல், இவர்களுக்கு தெரியாமலேயே பதிவாகி விட்டது.

இரவு வீட்டிற்கு வந்தவுடன், புது மொபைலில் உள்ள ஆப்ஷன்க ளை சும்மா நோண்டிப் பார்க்க, என் குடும்பத்தில் இவ்வளவு நாளாக நடந்த அசிங்க த்தை அறிந் தேன்.

உடனே என் மனைவியிடம், ‘உனக்கு என்ன குறை வைச்சேன்… ஊர் மெச்சும் தம்பதிக நாமன்னு சொல்வி யே… நான் சந்தேகப்படாம இருக்கணுங்கிறதுக்காக அப்படி சொன்னயா…’ என்று கேட்டு, அந்தப்போனை சுக்கு நூறாக உடைத்து எரிந்து விட்டேன்.

இப்போதும் என் மனைவி, தான் தவறாக பழகவில்லை என்றும், ‘இந்த மொபைல் எனக்கு பயன்படுத்த தெரிய ல; என் பழைய மொபைலுக்கு பேசு…’ என்றுதான்சொன்னேன் என்கிறாள். அவன் ஏன் வெளி நாட்டிலிருந்து, இவளுக்கு, ‘ டெலிட்’ செய்ய கற்றுத் தர வே ண்டும். ‘ இந்த மொபைலுக்கே பேசுகிறேன்; பதிவானால் என்ன … நம ஒண்ணும் தப்பாக பேசலையே’ன்னு தானே கூறியிருக்க வேண்டும்.

இப்பவும், சொல்கிறேன். நான் என் மனைவியை சந்தே கப்படவோ, தவறாக நினைக்கவோ இல்லை. ஆனால், இப்படி ஒரு உரையாடலை கேட்ட பின், எனக்கு தற் கொலை செய்து கொள்ளும் எண்ணமும், இவ்வளவு அன்யோன்யமாக காதல் திருமணம் செய்து, சந்தோஷ மான வாழ்க்கை வாழும் பெண்ணே தடம் புரளுகிறா ளே, பெண் இனமே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அம்மா… எனக்கு வாழும் ஒவ்வொரு நிமிடமும் நரக மாகி விட்டது. 13 ஆண்டுகள் வாழ்ந்த மனைவி துரோ கம் செய்து விட்டாள். வேறு எந்த உறவுக்காரர்களும் எனக்கு கிடையாது. 12 வயது மகன், 9 வயது மகள் இருவருக்காக, இவளுடன் எப்படி வாழ்வது… எத்த னையோ பேருக்கு நல்வழி காட்டும் நீங்கள், எனக்கும் ஒரு வழி கூறுங்கள். என் மனைவியும் கட்டாயம், உங்கள் பதிலை படிப்பாள்.

அன்பு மகனுக்கு—

காதல் திருமணம் செய்து, 13 ஆண்டுகள் குடும்பம் நட த்திய மனைவி, ‘டச்’ போன் மூலம் வெளிநாட்டு ஆணி டம் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார் என்பது உன் சந்தேகம். மனைவியை தவ றாக நினைக்கவில்லை, சந்தே கப்படவில்லை என கூறிக் கொ ண்டே சந்தேகப்படுகிறாய். தற் கொலைசெய்யவும்விழைகிறா ய்.

காதல் திருமணம் செய்து கொண்ட ஆண், பெண்ணு க்கு சம உரிமை வழங்குவான் அல்லது பெண்கள் அவ ர்களாகவே சம உரிமையை எடுத்துக் கொள்வர். காதல் திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக் கும் காதல் உணர்வு, நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும்; அதனால், அனிச்சையாய் இன்னொரு காதலில் ஈடுபடுவர்.

உன்னிடம் மூன்று அடிப்படை தவறு கள் உள்ளன.

ஒன்று, உன் மீது உன் மனைவிக்கு தார்மீக பயம் இல்லை; இதனால், எந்த தவறு செய்தாலும், கணவர் பெரி தாய் எடுத்துக் கொள்ள மாட்டார் என்ற எண்ணம் உன் மனைவியிடம் உள்ளது.

இரண்டு, ஒரு ஆணும், பெண்ணும் குடும்பம் நடத்துவ து, உறவினர்களுக்கு மத்தியில் இருக்கவேண்டும். இரு வீட்டார் தொடர்பு இல்லாமல், ஒரு அத்துவான காட்டில் இருப்பது, எந்த தப்பை செய்தாலும், அதை கண்டிக்க அருகில் ஆள் இல்லை என்கிற நிர்பயம் வந்து விடுகிறது.

மூன்று, தற்காலப் பெண்கள் வெகுளியாகவும், ஓட்டை யாகவும் இருப்பது, அவர்களுக்கும், அவர்களை சார்ந் தோருக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு ஆணிடம் பேச, ஒரு புத்திசாலிப் பெண், ஒரு சூட்சம அளவுகோல் வைத்திருப்பாள். உன் மனைவியின் சுயநலம் சார்ந்த வெகுளித்தனத்தை ஆரவாரமாய் ஆதரித்துள்ளாய்.

உன் மனைவிக்கு சாதகமான மூன்று அம்சங்களை பார்ப் போம்.

ஒன்று, வெளிநாட்டில் இருப்ப வனை நட்பு பாராட்டினால், சோப், வாட்ச், தலைவலி தைல ம் என பரிசு பொரு ட்கள் குவி யும். ‘பரிசு பொருட்களுக்காக மட்டுமே நட்பு பாராட்டுகிறேன் ; எங்கள் உறவில் வேறொரு அர்த்தமு ம் இல்லை…’ என, ஆணித்தரமாய் உன் மனைவி அறிவிக்கக் கூடும்.

இரண்டு, கொளுந்தன்மார்களை கேலி செய்தல், அன் னிய ஆண்களுடன் ப்ளோடோனிக் நட்பு பாராட்டுதல், பெண்களுக்கு கற்புநெறி பிறழாத மகிழ்ச்சியை கொடு ப்பவை.

மூன்று, உன் மனைவி வெள்ளந்தியாய் பழகி வர, வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண் நரித்தனம் செய்கிறானோ என்னவோ!

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்த, ‘மொபைல் போன் நட்பு உங்களது குடும்பத்தை எப்படிஎல்லாம்சின்னாபின்னாபடுத்தும் என்பதை, உன் காதல் மனைவிக்கு பொறுமையாய் விளக்கு. பேச்சை சிறிதுசிறிதாய் குறைத்துக்கொள்ள ஆலோசனை கூறு. வெளிநாட்டு ஆணிடம் உன் மனைவிக்குஅவளையறியாமல் காதல் வந்திருந்தால், அதை கத்தரித்து விட்டு வெளியே வரச் சொல்.

எந்த பரிசு பொருட்களை ஆசையாய் வாங்கிக் கொள் கிறாளோ அதே பொருட்களை நீ வாங்கிக் கொடு. அந்த ஆணிடம் பேசி, உன் மனைவியுடனான அவனது போ ன் நட்பு இருவர் குடும்பத்துக்கும் என்னென்ன பிரச்ச னைகளை கொண்டு வந்து சேர்க்கும் என விளக்கி இருவர் நட்பை கத்தரி.

வீட்டை உறவினர்களுக்கிடையே மாற்று. மனைவி மற்றும் குழந்தைக ளுடன் இன்பச் சுற்றலா சென்று வா. பரஸ்பரம் காதல் ஜீவித்திருப்பதை நீயும், உன் மனைவியும் வெளிப்படுத்திக் கொள்ளுங்க ள். மனைவியுடனான தாம்பத்தியத்தை அதிகப்படுத்து; சந்தேகக் கோடு அது, சந்தோஷக் கேடு.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: