Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு

காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவில் மீண்டும் சாப்பாடு என்று மூன்று வேளையும் சரியான அளவில் சரியான நேரத்தில்

சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த நோயும் அணுகாது. சரி விஷயத்திற்கு வருவோம். விடு முறை தினங்களில் மாலை நேரத்தில் பஜ்ஜி, போண்டா ஆகிய உடலுக்கு கேடு விளைவி க்கும் உணவுப்பண்டங்களை குழந்தைகள் முதல் பெரியவர்க ள் வரை உட்கொள்வதால், பக்க‍ விளைவுகளும், பின் விளைவுக ளும் ஏற்படுகின்றன• இதே மாலை நேரத்தில் நல்ல‍ ஆரோ க்கியமான உணவினை, கொஞ்சமாக எடுத்துக் கொண்டால், ஆரோக்கியத்தின் அறிகுறி எனலாம்.
சரி! மாலைநேர சமையல்குறிப்பில், தேங்காய், மாங்காய், சோள சுண்டல் கலந்த கலவையை எப்ப‍டி செய்ய‍வது என்று பார்ப்போமா?

தேங்காய் மாங்காய் சோள சுண்டல்

தேவையானவை:

முற்றிய தேங்காய் – முக்கால் மூடி

அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) – ஒன்று

அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் – முக்கால் கப்

வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள் – ஒரு சிட்டிகை

நறுக்கிய வெள்ளரிக்காய் – கால் கப்

எலுமிச்சை பழம் – அரை மூடி

நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுர ங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து… உப்பு, மிளகுத்தூள், சீரகத் தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.

மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.

=> மாலதி கிருஷ்ணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: