… குளிப்பவர்களுக்கு பல நோய்கள் தாக்கும் அபாயம் – மருத்துவர்களின் அதிரடி எச்சரிக்கை
… குளிப்பவர்களுக்கு பல நோய்கள் தாக்கும் அபாயம் – மருத்துவர்களின் அதிரடி எச்சரிக்கை
என்ன இது? குளிப்பவர்களுக்கு பல நோய்கள் தாக்கும் அபாயமா? வேடி க்கையாக இருக்கிறதே! என்று
நினைப்பவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படித்தால் உண்மை புரியும்.
நாம் தினமும் இருவேளை குளித்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இரு ந்தால்தான் நோய்கள் நம்மை நெருங்காது என்பது முற்றிலும் உண்மை
ஆனால், நீங்கள் எங்கே எப்படி குளிக்கிறீர்கள் என்பது தான் மிக முக்கியம். அனைவரும் பயன்படுத்தும் நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்களில் இருக்கும் செயற்கை அருவிக ள், ஆறு, குளம், மற்றும் ஏரிகளில் குளிப்பவர்க ளுக்கு கட்டாயம் பல நோய்கள் படையெடுத்து அவர்களது உடலை ஆக்கிரமித்து, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்கிறா ர்கள் மருத்துவர்கள். அது எப்படி என்றால், ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்க ப்பட்டவர், செயற்கை அருவியிலோ அல்லது நீச்சல்குளத்திலோ அல்லது ஆற்றிலோ அல்லது குளத்திலோ அல்லது ஏரியிலோ குளிக்கிறார் என்றால் அவரது உடலில் இருக்கும் வியர்வை, எச்சில், மற்றும் சிறு குழ ந்தைகள் கழிக்கும் சிறுநீர் எல்லாம் அவற்றில் கலக்கும் அதில் உள்ள கிருமிகளால் அந்த நீரில் குளிக்கும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு நோய் கண்டிப்பாக தாக்கும். மேலும் செயற்கைஅருவிகளில் கொட்டும் நீரை எந்த விதமான
சுத்திகரிப்பும் செய்யப்படாமல் அப்படியே அதை மறு சுழற்சியில் அதே நீரை கொட்ட விடுகிறார்கள். இதன்காரணமாகவே அந்த நீரில் குளிக்கும் 10பேரில் 8பேருக்கு ஒரே நேரத்தில் பலநோய்கள் தாக்கும் அவர்களது உடல் ஆரோக்கியத்தை கேள்விக்குரியாக்கி விடும் சமயத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆகவே இதுபோன்ற பொது இடங்களில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
– தகவல் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி