வம்பு வளர்க்கும் கொம்பன்! – திரைப்படம் வெளியாகுமா? – இதுவரை வெளி வராத தகவல்கள்
வம்பு வளர்க்கும் கொம்பன்! – திரைப்படம் வெளியாகுமா? – இதுவரை வெளி வராத தகவல்கள்
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட
பலர் நடித்திருக்கும் படம் ‘கொம்பன். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகா ஷ் இசையமைத்திருக்கிறார் இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24ஆம் தேதி, இன்று கொம்பன் படம் சென்சார்! என்று கொம்பன் படக்குழு பகிரங்கமாக அறிவித்தது. பொதுவாக ஒரு திரைப்படம் சென்சார் போர்டுக்கு செல்லும் தேதியை இப்படி பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது என்ற ஒருவிதி இருக்கிறது. அதை இந்த கொம்பன் படக்குழு மீறியது.
மேலும் இத்திரைப்படத்தில் சாதிவெறியை தூண்டும் விதமாக காட்சிகள் இருப்பதால் இதற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் திரு.கிருஷ்ணசாமி அவர்கள், சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கும் அதனோடு தொடர்புடைய பிற துறைகளுக்கும் ஆட்சேபனை கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதால் சென்சார்போர்டு, கொம்பன் திரைப்படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
நிலைமை இப்படியிருக்க, அன்று மாலையே கொம்பன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டின் யூ சான்றிதழ் கிடைத்து விட்டதாகவும், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று கொம்பன் திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகும் என்று ஊடகங்களுக்கு கொம்பன் படக்குழு செய்தி கொடுத் துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்சார் போர்டு, சான்றிதழ் கொடுக்க மறுத்தவிட்டபோது, எப்படி கொம்பன் திரைப்படத்தை வெளியிடுவார்கள் என்ற கேள்விக்குறி எழுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
காற்று வாக்கில் என் காதுக்கு வந்த செய்தி இது!
WHY THIS KOLAVERY