Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்

அன்புள்ள அம்மா அவர்களுக்கு —

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, சின்னம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன் நான். +2 வரை படித்துள்ளேன். எனக்கு இரு சகோதரிகள்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த

நான், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை, வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்த போது என் வயது, 27; தற்போது, 44.

நான் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக உள்ளேன். என் மனை வி அரசு மருத்துவ கல்லூரியில், லேப் டெக்னிஷியனாக உள்ளார். என் மாத வருமானம், 12,000 ரூபாய்; அவர் மாத வருமானம், 35,000 ரூபாய். எனக்கு, 15 மற்றும் 8 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர். இக்கடிதம் எழுதும் வரை நான் என் தாய்வீட்டு படியை மிதித்தது இல்லை. காரணம், அவர்களுடனான உறவு முறிந்து, 17 ஆண்டுகள் ஆகி விட்டன. மனைவி, பிள்ளைகளே உலகம் என்று இருந்து விட் டேன். மகன்கள் கேட்ட எதையும் மறுத்தது இல்லை; எனக்கு என்று தனிப்பட்ட சேமிப்பு இல்லை.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், சொந்த வீடு கட்டும் முயற்சியில் இறங் கினோம். நிலத்தை, மனைவி தன் பெயரில் வாங்கி னார். வீடு கட்டும் முன், இருவரும் கலந்து பேசியதில், வீடு கட்டி முடித்தவுடன் எப்போதும் போலவே, வீட்டு செலவு களை நான் பார்த்துக் கொள்வது என்றும், வீட்டுக் கான கடனை மனைவி பார்த்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப் பட்டது. இச்சமயம், நான், மாதத்தில், 20 நாட்கள் வேலைக்கு செல்வதும், மீதி நாட்கள் வீட்டு கட்டுமான வேலையை பார்ப்பதுமாக இருந்தேன்.

இந்நிலையில் ஒருநாள் மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது யாருடனோ மொபைலில் பேசியவாறு வந்தார் என் மனைவி. வீட்டிற்கு வந்த பின்பும், அரைமணி நேரமாக பேசிக் கொண்டு இருந்தார். அதனால், ‘மேடம்… யாருடன் போனில் இவ்வளவு நேரம் பேசினீர்கள்?’ என்று கேட்டேன். (என் மனைவியை மேடம் என்று தான் அழைப்பேன்.) அதற்கு, ‘ நான் வேலைக்குபோறேன்; எனக்கு பணம் வேண்டும்; அதனால், யாரிடம் வேண்டு மானாலும் பேசுவேன். உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…’ என்றாள்.

இதைக்கேட்டவுடன், அமைதியாகசென்று விட்டேன். இதன்பின், தற்போது வசிக்கும் வீட்டின் மேல் மாடியில் தனியாக இருந்து வருகிறேன். இவ் விஷயம், தற்போது பெரிய பிரச்னையாகி, எனக்கு வீட்டில் எந்த உரிமை யும் இல்லை என்றும், மகன்களிடம் பேசக் கூடாது என்றும், வீட்டைவிட்டு வெளியே போகும்படி கூறி விட்டார் மனைவி. இத னால், கடந்த எட்டு மாதங்களாக தனியாக வசித்து, கடையில் சாப்பிட்டு வருகிறேன்.

இதன் காரணமாக, வேலைக்கு போக முடியாமல் இருந்து தற்போது, 10 மாதங்களாக வேலைக்கு செல்கிறேன். இதுகுறித்து அவர்கள் வீட்டினர் அவளிடம் பேசிய போது, தான் பேசியது சரி என்றே கூறினாள். அதனால், அவர்களும், ‘வேலைக்கு போங்கள்; ஏ.டி.எம்., கார்டை கொடுத்து விடுங் கள்; சம்பளத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்…’ என்று கூறியதுடன், ‘நான் வீட்டிற்கு வரக்கூடாது; பிள்ளைகள் பேச மாட்டார்கள்; சாப்பாடு போட முடியாது…’ என்று என் மனைவி கூறியதாகவும் கூறினர்.

இது எந்த விதத்தில் சரியென்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பேசிய தில் இருந்து பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு பெண்ணுடன் நான் எப்படி வாழ்வது? இருப்பினும், என் இரு குழந்தைகளை பிரிய மனம் இல் லை. என் குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள் அம்மா.

இப்படிக்கு,
அன்புள்ள மகன்.
அன்புள்ள மகனுக்கு —

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீ, தாழ்த்தப்பட்ட இன பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதை மிகப் பெரிய தியாகமாக கருதுகிறாய். அதே உணர்வுகளுடன் மனைவியு டன் பேசி பேசி, அவள் மனதை காயப்படுத்தினாயோ என்னவோ… மனைவியை எல்லா ஆண்களும், ‘நீ, வா, போ…’ என்றும், ‘வாடி, போடி…’ என்றும் உரிமையாக விளிப்பர். நீ மட்டும் மனைவியை, ‘நீங்க, வாங்க, போங்க…’ என்றும், ‘மேடம்…’ என அழைப்பதும் மகா செயற்கையாக உள்ளது.

காதலின் போதோ அல்லது 16 ஆண்டுகள் திருமண வாழ்வின் போதோ, உன் பலவீன புள்ளிகளை உன் மனைவி கண்டறிந்துள்ளாள்.

உலகம், தேனாக இருந்தால் விழுங்கி விடும்; வேப்பங்காயாக இருந்தால் துப்பிவிடும் என்ப தை நீ உணரவில்லை. காதல் திருமணத் திற்கு பின், பெற்ற தாயை விட மேலாக மதிக்கும் உன் சின்னம்மாவுடன் பேசியிருக்கலாம். முழுக்க முழுக்க மனைவி மற்றும் குழந்தைகள் காலடியி ல் விழுந்து கிடக்காமல், நடுநிலை வகித்திருக்க வேண்டும்.

உன் மனைவி, உன்னை விட மும்மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாள். அத னால், அதீத கர்வமும், உன் மீது இளப்பமும் அவளுள் பொங்கி வழிகிறது. பணிபுரியும் இடத்தில் உன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருக்கக் கூடும். அவர்கள் உன் மனை வியின் நட்புக்காகவும், பேச்சுக்காகவும் பண ம் செலவழிக்க தயாராய் இருக்கலாம். அதிக சம்பளம் பெறும், உன்னை விட கூடுதல் பெர்சனாலிட் டியாய் இருக்கும் தன் ஆண் நண்பர்களுடன் உன்னை ஒப்பிட்டு, உன்னை பொட்டுப் பூச்சியாய் கருதுகிறாள் உன் மனைவி.

பணிக்கு செல்லும் பெண்களில் சிலருக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடு ம் வாய்ப்பு மிக அதிகம். இந்த அமில சோத னையில் ஜெயித்து, பதிவிரதைகளாக திகழும் பெண்களும் இருக்கின்றனர்.

நடுத்தர மக்களின் கனவுகளில் ஒன்று சொந்தமாய் வீடு கட்டுவது. மனை வாங்கி ஆயிரம் சதுர அடியில் வீடு கட்ட குறைந்த பட்சம், 40 லட்சம் ரூ பாய் தேவை. பணத் தேவை அழுத்தும் அழுத்தத்தில், உன் மனைவி தடம் பிறழ்கிறாளோ என்னவோ?

மனைவி உன் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய பின், தகுந்த நேரத் துக்கு காத்திருந்து, அவளுடன் சமாதானம் பேசியிருக்க வேண்டும் நீ. தொட்டாசிணுங்கி போல் வீட்டின் மேல் மாடிக்கு தனிக்குடித்தனம் போய் விட்டாய். அத்துடன்,

உன் மனைவியும், குழந்தைகளும் வெறுக்கத்தக்க விஷயம் ஒன்று உன் னிடம் உள்ளது. அதை, நீ உன் கடிதத்தில் எழுதாமல் மறைத்து விட்டாய். உன்னிடம் குடிப்பழக்கமோ, போதை வஸ்துவை பயன்படுத்துதலோ பரத்தையர் தொடர்போ, ஏதோ ஒரு குறை உள்ளது.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சின்னம்மாவை விட்டு உன் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் உன் சார்பாக பேச சொல். உன் குறைகளை, பலவீனங்களை அறவே நீக்கி விடு. மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து வாழா மல், ஏ.டி.எம்., கார்டை தானம் செய்ய தயாராக இல்லை என்பதை தெரிவி. இரு மகன்களுட னான தகவல் தொடர்பை பலப்படுத்து.

ஆண் நண்பர்களிடம் பணம் கைமாத்து பெறும் உன் மனைவி, அவர்களு டன் படுக்கையை பகிர்ந்து கொள்ளாமலும் இருப்பாள். சில பெண்கள், ஆண்களிடம் கவர்ச்சியாய் பேசி, பணம் கறப்பர். ஆனால், செக்ஸ் என்று வரும் போது நைச்சியமாக நழுவி விடுவர்.

உன்னுடைய சமாதான முயற்சிகளுக்கு உன் மனைவி கடைசி வரை மசியாவிட்டால், விவா கரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தை நாடு.

மகன்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யட்டும். தன்னந்தனியா க வாழ்ந்தாலும், சுயகவுரவத்துடன், முதுகெலு ம்புடன் வாழ். வீட்டையும், அச்சடித்த காகிதத் தையும், மஞ்சள் உலோகத்தையு ம் கட்டிக் கொண்டு, உன் மனைவி அழட்டும்!

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: