Friday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிறரை வசப்படுத்துவது எப்படி? – லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை

பிறரை வசப்படுத்துவது எப்படி? –  லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை

பிறரை வசப்படுத்துவது எப்படி? –  லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை

பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். ‘பிறரை

வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது… இதெல்லாம் அனாவசியம்; தேவை யில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல…’ என்று வாதி டும் வறட்டுவாதிக ளையும்கூட, இக்கட்டுரை சிறு மனமாற்றத்திற்கு வித்திடும் என்ற நம் பிக் கை, எனக்கு உள்ளது.

மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவ தை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விட வும் தேவையான விஷயம் இது. அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின், கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்மொழிகள். நிறைவா க, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள்.

‘என்னை எவனும்மதிப்பதில்லை; யாரும் பொருட்படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும் செய்றதில்லை. மோச மான உலகமிது…’ என்று ஒருவர் புலம்பினா ல், கோளாறு இவரிடம் தான் உள்ளது என்பது மிகத் தெளிவு.

‘பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன் னா எவன் மதிக்கிறான்…’ என்று வாதிடுவோ ரும் இருக்கின்றனர்.

பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின் பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்க ள். மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?

சமூகத்தைஒட்டுமொத்தமாக குற்றவா ளிக் கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு பதில்வாதம் வைக்க ட்டுமா… மற்றவர்களை வசப்படுத்த தெரியாமல்போன குறை உங்களிடம் இருப்பதால்தான், இந் நிலை க்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடு வோம்!

ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை, அடுத்து பேசியவர் கடுமை யாக குறை கூறினார். (இத்தனைக்கும் அது பட்டி மன்றம் அல்ல!) பலருக்கும், ‘என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்…’ என்று தோன் றியது. சுட்டிக் காட்டப்பட்டவர், ‘ஸ்கேன் எந்திரம் கூட இப்படிக் கண்டு பிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன். என்னை நான் திருத்திக் கொள் கிறேன்…’ என்று கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர் இவர் தான்.

தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால் வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ் இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால் வசப்படுத்தலாம்.

போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்படுத்தலாம்; கருணையா ல், பரிவால் வசப்படுத்த முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.

வீட்டில் ஒருபழுது; அதைச்சரிசெய்ய வரும் ஊழியரை, ‘எப்ப சொன்னே ன்; இப்பத்தான் வர்றே.’ என்று வரவேற்பதைக்காட்டிலும், அதையேசிறிது மாற்றி, ‘ வாங் க வாங்க… உங்களை தான் ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக் கோம். முதல்ல டீ, காபி; அப்புறம் தான் வேலை…’ என்று கிண்டலடிக்காத தொனியில் சொல்லுங்கள்.

வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா விட்டால் என்னைக் கேளுங் கள். ஏனோ ஊழியர்களை மிக மோசமாகவே நடத்துகி றோம். அவர் மனதிற்குள் ஓடும், ‘நெகட்டி வ்’ ஒயரை தொடாதீர்கள்; ‘ஷாக்’ தருவார். ‘பாசிட்டி வ்’ ஒயரை தொடுங்கள்; அவர் நம் வசமாவார்.

சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்; விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங் கள். பயணமே இனிமையாகி விடும். வசப்படுத்துறதாவது வெங்காயமா வது என்று நடந்து பாருங்கள்… பயணத்தின் இனிமையை சக பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை உணர்வீர்கள்.

திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்; பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம் புரியும்.
1
நோட்டால்(பணத்தால்) வசப்படுத்துங்கள்; நீங்களு ம் இந்திரன், சந்திரன் தான்.

பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கும்.

பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!

=> லேனா தமிழ்வாணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: