Monday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – பலாப்பழ பிரியாணி

சமையல் குறிப்பு – பலாப்பழ பிரியாணி

சமையல் குறிப்பு – பலாப்பழ பிரியாணி

மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளையும் நம் முன்னோர்கள், முக் கனிகள் என்று குறிப்பிட்டு, இவற்றின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்தினார்கள். இந்த

மூன்று பழங்களில் இரண்டாவது இடத்தைப்பிடித்திருக்கும் பலாபழத்தை க் கொண்டு பலாப்பழ பிரியாணி எப்ப‍டிசெய்யலாம் என்று பார்க்க‍லாம். செய்வதோடு மட்டுமல்லிங்க! நீங்களும் சுவைத்து பிறரும் சுவைக்க‍ கொடுங்க!

சரி இப்போ பலா பழபிரியாணி- தேவையானவைகளும் செய்முறையும்
தேவையானவை:
பலாச்சுளை – ஒரு கப் (சதுரமாக நறுக்கவும்)
பாசுமதி அரிசி – 2 கப்
பிரியாணி மசாலா – ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2
பிரிஞ்சி இலை – 2
முந்திரி, உலர் திராட்சை தலா – 2 டீஸ்பூன்
வறுத்து எடுத்த வெங்காயம் – ஒரு கப்
ரீஃபைண்ட் ஆயில், நெய் தலா – 2 டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை – தலா அரை கப்
ஞ்சள்தூள் –அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ் பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:

அரிசியை முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். கடாயை அடு ப்பில் வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, காய்ந் ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, முந்திரி உலர் திராட்சையை யும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதனுடன் புதி னா, கொத்தமல்லித்தழை, இஞ்சிபூண்டு பேஸ்ட், நறுக்கியபலாச்சுளைசேர்த்து, மஞ்சள் தூள், பிரி யாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வேக வைத்த சாதத்தை சேர் த்து நன்குகிளறவும். வறுத்த வெங்காயம், நெய், எலுமிச்சைச்சாறு ஆகிய வற்றை இதில்சேர்த்துக் கலந்து, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத் து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கவும். இதனை வெங்காயம் தயிர் ராய்த்தாவுடன் பரிமாறலாம்.

=> சுமத்ரா

Leave a Reply