Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா? என்று அறிவதற்கான‌ மருத்துவ பரிசோதனைகள்

ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா? என்று அறிவதற்கான‌ மருத்துவ பரிசோதனைகள்

ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா? என்று அறிவதற்கான‌ மருத்துவ பரிசோதனைகள்

ஆண்களுக்கு ஆண்மை உள்ள‍தா என்பதை மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் மூலமாக கண்டறிய

முடியும். அந்த பரிசோதனையை நடத்துவது யூரோ – ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்கள்தான். அதாவது சிறுநீரகவியல் மற்றும் ஆண்மைக் குறை பாடு நிபுணர்கள்.

மொத்தம் 3 விதமான சோதனைகள் இதில் நடத்தப்படும். முதலில் செமன் அனாலிசிஸ். அதாவது விந்தணு ஆய்வு. விந்தணு எண்ணி க்கை, வீரியம் எந்தளவுள்ளது என்பது ஆராயப் படும். இரண்டாவது, ஆண்குறி ஸ்கேன். ஆண்குறி எழுச்சியுடன் உள்ளதா என்பதைஅறிய டாப்ளர் ஸ்கேன் மூலம் ஆய்வு செய்வார்கள். கடைசியாக விஷூவல் எக்ஸாமினேஷன். அதாவது ஆண்குறி எழுச்சி பெற்ற நிலையில் எப்படி உள்ளது, சாதாரண நிலையில் எப்படி உள்ளது என்பது ஆராய்வது.

விஷூவல் எக்ஸாமினேஷனின்போது ஆண்குறி எழுச்சி நிலையில் எப்படி இருக்கிறது, சாதாரண நிலையில் எப்படி இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். இத ன் மூலம் ஆண்குறியானது வழக்கமான எழுச்சி நிலையில் உள்ளதா அல்லது அதில் குறைபா டு உள்ள தா என்பதை அறிய முடியும்.

மேற்கொள்ள‍ப்பட்ட‍ அத்தனை பரிசோதனைகளும் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா, அதற்கான தகுதியுடன் அந்த நபர் உள்ளாரா, விந்தணு எண்ணிக்கை இயல்பு நிலையில் இருக்கிறதா என்ற முடிவுக்கு டாக்டர்கள் வருவார்கள்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: