Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த‌ '3 வகை' செல்வங்கள், நிலையான செல்வங்கள் – ஆன்மீகம் சொல்லும் அரிய தகவல்

எந்த‌ 3 வகை செல்வங்கள், நிலையான செல்வங்கள் – ஆன்மீகம் சொல்லும் அரிய தகவல்

எந்த‌ 3 வகை செல்வங்கள், நிலையான செல்வங்கள் – ஆன்மீகம் சொல்லும் அரிய தகவல்

இந்த உலகில் மனிதர்கள், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள‍ பணம் அதாவது

செல்வம் வேண்டும். செல்வங்கள் எத்த‍னையோ வழிகளில் அந்த செல்வ ங்களில் முக்கியமாக 3 வகையான செல்வங்கள் நிலையான செல்வங் கள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள‍னர்.

மூன்று வகைகளில் வரும் செல்வங்கள்

1. லட்சுமி செல்வம்,
2. குபேர செல்வம்,
3. இந்திர செல்வம்
லட்சுமி செல்வம்……

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாக வும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன்,

ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகா லட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.

மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கி னாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அள வற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங் கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.

லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோ ணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வ ம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப்போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

குபேர செல்வம்……..

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்த ச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்ற ப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத் தை ஏற்படுத்திக்கொண்டார். இவர் தவம்செய் து அந்தத் தவபலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தா ல், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுயலாபம் போன்ற வையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல் வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன் றே விரைவில் மறைந் துவிடவும் செய்யும்.

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம்செய்து வைப்பது போன்ற பொ துக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிற ங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம்………

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன்வைத்தே கொண்டாடுகிறோ ம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலை வனும்கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகுசிலரே. பசு, வீடு, அரசபோகம் மற்றும் பொன்பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.

இந்திரன்அருளால் அடையும்செல்வம் மூன்று தலைமுறைகள்வரை வருவதுஅரிதிலும் அரி து. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்து விடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குலதெய்வத்தைப்பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட் டால் நலம் விளையும்

= ஐயராத்து பொண்ணு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: