Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகுந்த வீடு செல்லும் மருமகள்களுக்கான அதி முக்கிய பதிவு இது! – படிக்கத் தவறாதீங்க!

புகுந்த வீடு செல்லும் (சென்ற) மருமகள்களுக்கான அதி முக்கிய பதிவு இது! – படிக்கத் தவறாதீங்க!  

புகுந்த வீடு செல்லும் (சென்ற) மருமகள்களுக்கான அதி முக்கிய பதிவு இது! – படிக்கத் தவறாதீங்க!

திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கும் பெண்கள் ஒரு வித

எதிர்பார்ப்போடு தான் செல்வார்கள்.

தாய் வீட்டில் செல்லமகளாக வளர்ந்துவிட்டு, புகுந்த வீட்டிற்கு செல்லும்போது, சந்திக்கும் புது உறவுகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்ற தயக்கம் இருக்கும்.

கணவன்மார்களுக்கும் தங்கள் துணையின் மேல் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்.

அதே போன்று, வீட்டிற்கு வரும் மரு மகள் புகுந்த வீட்டில் நல்லுறவை ஏற்ப டுத்துவாள் என்று ஒவ்வொரு மாமியா ரும் நம்புவார்கள்.

ஆனால், ஒரு சில வீட்டில் ஒற்றுமை இருந்தாலும், பலரதுவீட்டில் வேற்று மை யே மேலோங்கும்.

ஒரு நல்ல மருமகள் வீட்டை சரிசமமாக கையாண்டு சிறந்த வழியில் கொண்டு செல்லலாம். வேறொரு குடும்பத்தில் இருந்து வந்து, புதிய மனி தர்களிடமும், புதிய குடும்பத்திலும் அனுசரித்து போவதற்கு சில காலம் தேவைப்படும்.

நமது குடும்பத்தை சரிசமமாகவும், நல்முறை யில் வழிநடத்தவும், நாம் புகுந்த வீட்டில் சண்டைகளை தவிர்க்க வேண்டும்.

அதனால் அந்த சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு நடப்பதால், வாழ்க்கை யை நல்ல முறையில் வாழலாம்.

சந்தர்ப்பங்களை புரிந்து கொள்ளாமல், கோபமாக கையாண்டால் மாமி யார், மருமகள்உறவில் விரிசல்ஏற்படலாம்.

உங்கள் கணவரை நல்ல ஒரு மனிதராக வளர்த்ததற்காக அவரது பெற்றோர்களை பாராட்டுங்கள்.

அவர்கள் உங்கள் கணவரை வளர்ப்பதற்கா க பட்ட கஷ்டங்களை ஏற்று கொள்ளுங்கள். இது அவர்களுக்கு நிச்சயமாக ஒரு இனிமையான உணர்வை கொண்டு வரலாம்.

திருமண வாழ்க்கையில் சண்டைகள் வருவ து பொதுவான ஒன்றாகும். உங்கள் கணவரி டம் சண்டை ஏற்பட்டால் தேவை இல்லாமல் அவர்களது பெற்றோரை இழுக்கக்கூடாது.

இதுவே அவர்களோடு சண்டை ஏற்படுவதை தவிர்க்கும். ஒரு நல்ல மரு மகளாக அவர்களின் உணர்ச்சிகளையும் பாதுகாப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல மருமகள் தனது மாமியாருக்கு எப்பொ ழுதுமே நல்ல தோழி யாகவே இருப்பார். எனவே உங்கள் மாமியாரை தோழியாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

=> அமுதா கோ. பாலகிருஷ்ணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: