Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

– – அப்பப்பா! எத்த‍னை எத்த‍னை சங்கடங்கள்! போதுமடா இந்த பெண் பிறவி!

அப்பப்பா எத்த‍னை எத்த‍னை சங்கடங்கள்! போதுமடா இந்த பெண் பிறவி, – பெண்ணைச் சிதைக்கும் ஆணினமே!

அப்பப்பா எத்த‍னை எத்த‍னை சங்கடங்கள்! போதுமடா இந்தபெண் பிறவி,
சதைக்கு ஆசைப்பட்டு, பெண்ணைச் சிதைக்கும் ஆணினமே!

உன் தாய்க்கு

உன் தாய்க்கு இருக்கும் சதைதான் அந்த பெண்ணுக்கும் இருக்கிறது.
உன் சகோதரிக்கு இருக்கும் சதைதான் அந்த பெண்ணுக்கும் இருக்கிறது.
உன் மனைவிக்கு இருக்கும் சதைதான் அந்த பெண்ணுக்கும் இருக்கிறது.
உன் மகளுக்கு இருக்கும் சதைதான் அந்த பெண்ணுக்கும் இருக்கிறது.
பிறிதொரு ஆடவன் உன் தாய்க்கு  இருக்கும் சதைமேல் வெறிகொண்டால் . . .
பிறிதொரு ஆடவன் உன் சகோதரிக்கு இருக்கும் சதைமேல் வெறிகொண்டால் . . .
பிறிதொரு ஆடவன் உன் மனைவிக்கு இருக்கும் சதைமேல் வெறிகொண்டால் . . .
பிறிதொரு ஆடவன் உன் மகளுக்கு இருக்கும் சதைமேல் வெறிகொண்டால் . . .

நீ வேடிக்கை பார்ப்பாயா? அல்ல‍து சீறிப்பாய்ந்து அந்த மனிதமிருகத்தை வேட்டையாடுவாயா?
வேடிக்கை பாப்பேன் என்று நீ சொன்னால், நீ மனித இனத்திலும் சேர்க்கையில்லை மிருக இனத்திலும் சேர்க்கையில்லை என்று நான் சொல்வேன்.
வேட்டையாடுவேன் என்று நீ சொன்னால், உனக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?

நீ துடிப்பதைப்போலத்தான் அந்த பெண்ணின், தந்தை அல்ல‍து மகன், சகோதரன், கணவன் துடித்து உன்னை வேட்டையாடி உன் சிதைக்கு உன் மகனே தீ மூட்டும் நிலை வந்திடுமே!
த‌வறை உணர்ந்து, நீ திருந்து அதுவே சமூகத்திற்கு நல்மருந்து
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி – 98841 93081

0 Comments

  • Priyan

    enna solla vareenge?…..Naan ithu varaiyulum entha pennaiyum paaliyal vanmurai seiyavillai…appadi irukka yen ella aangalum etho oru pennai “rape” seiththathu pol ezhuthugireergal?…oththukiren..ella aangalukkum pennin sathai mel oru eerppu undu….atharkkaaga ella pengalaiyum appadi paarpathillai…appadi paarthaalum avargalai vanmuraikku izhukkavillai…….aathalaal, ithu oru thavaraana pathivu…….

    • சதைக்கு ஆசைப்பட்டு, பெண்ணைச் சிதைக்கும் ஆணினமே!
      என்ற வரியினை நீங்கள் கவனிக்க வில்லையா?
      இதன் அர்த்த‍ம், பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்றவைகளைச் செய்யும் ஆண்களைத்தான் நான் குறிப்பிட்டேனே தவிர, எல்லா ஆண்களையும் நான் சொல்ல‍வில்லை.
      திரும்பவும் சொல்கிறேன்.
      கற்பழிப்பு, பாலியல்தொந்தரவு செய்யும் ஆணினத்தைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    • ஆண்களை மூன்று இனங்களாக‌ பிரிக்க‍லாம்.
      1. தனது மனைவிக்கு கனவிலும் துரோகம் செய்ய‍க்கூடாது என்ற நிலைப்பாட்டை உயிருள்ள‍வரை கடைப்பிடிக்கும் ஆணினம்
      2. தனது மனைவிக்கு கனவிலும் துரோகம் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தும், தன் கண்ணெதிரே பிற பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையைத் தட்டிக் கேட்கும் ஆணினம்
      3. தனது மனைவியைத் தவிர்த்து, காமத்திற்காகவும், நாடும், அல்ல‍து பாலியல் வன்கொடுமை செய்யும் ஆணினம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: