சமையல் குறிப்பு – அவல் புட்டு
சமையல் குறிப்பு – அவல் புட்டு
சவையான அவல் புட்டு, ருசியும் இதில் இருக்கு கூடவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கவல்லது என்பதால், இந்த
அவலுக்கு தனி இடம் உண்டு. சரி இப்போ அவல் புட்டு எப்படி செய்வது என்று பார்ப்போமா?
முதலில் கீழே குறிப்பிட்டிருக்கும் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
தேவையான பொருள்கள் –
அவல் – 1 கப்
சீனி – 10 மேஜைக்கரண்டி
தண்ணீர் –1 1/2 கப்
தேங்காய் துருவல் – 3/4 கப் (75 கிராம் )
உப்பு – 1/4 தேக்கரண்டி
செய்முறை –
அடுப்பில் கடாயை வைத்து அவலை பொன்னிறமாக வறுத் து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சுடவைக்கவும். பின் அடுப் பை அணைத்து விட்டு சுடு தண்ணீரை அவலோடு சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதனோடு தேங்காய்துருவலையும் போட்டு கிளறவும்.
அதன்பிறகு இந்தகலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். .
வெந்ததும் ஒருபாத்திரத்தில் அவல்புட்டு மற்றும் சீனியைப் போட்டு கிளறவும். சுவையான அவல் புட்டு ரெடி.
=> சுகந்தி