Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" – விரக்தியில் காமராஜர்…! – அரிய வரலாற்றுத்தகவல்

இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!” – விரக்தியில் ‘காமராஜர்’…! – அரிய வரலாற்றுத்தகவல்

“இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!” – விரக்தியில் காமராஜர் உதிர்த்த‍து – அரிய வரலாற்றுத்தகவல்

எளிமை, நல்ல சிந்தனை, விவேகம், துணிவு, வேகம் இவைகளின் ஒட்டு மொத்தமாக உருவமாக திகழ்ந்தவர் நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான்!. ஆம் அவரது

ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பல வியத்தகு மாற்றங்களை செய்தவர் இவர்தான். நிலைமை இப்ப‍டியிருக்க‍ 

1967ஆம் ஆண்டு நடைபெற்ற‍சட்டமன்றத்தேர்தலி ல் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்துவிட்டார். “ இந்த மக்களுக்காக நான் நிறைய செய்யவேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப் போட்டுவிட்டார்களே” என்று நண்ப ர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ ரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்க வோ, வாக்குசேகரிக்கவோ வரமாட்டேன் என்றுசொல்லி விட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம் மதிக்கச்செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதி கள் எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொரு வர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கு ம் உதவியாக அப்பா என்னை அழைத்துக் கொண்டார்.
 
நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத்தந்த விமான டிக்கெட் டுடன் நாகர் கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகு தியைசுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப்பார்த்தோம். கடைசிவரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில் லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார்.

சிலதினங்கள்சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலி ருந்துவருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச்சொ ல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந் தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங் கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி.140 அம்பாஸி டர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு கட்சி அன்பளிப்பாக கொடு த்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர்(பரிசாக) கொடுத்த கார்” என்றுதா ன் அப்பா சொல்லுவார்.

க‌வியரசு கண்ண‍தாசனைப்பற்றி, அவரதுமகன் திரு.காந்தி கண்ண‍தாசன் கூறியது!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: