Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூட்டு வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் – அவசியமான முழு பட்டியல்

மூட்டு வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் – அவசியமான முழு பட்டியல்

மூட்டு வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் – அவசியமான முழு பட்டியல்

இன்றைய நாகரீக உலகில் இள வயதிலேயே மூட்டு வலி நோய்க்கு பல இளைஞர்கள் ஆளாகி வருவது வேதனைக்குரிய

விஷயமாகும். மேலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுகின்றனர்.  இதற்கான மருத்துவ சிகிச்சை யை எடுத்தால் மட்டும் போ தாது. இந்நோய் இருப்போருக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்க‍ வேண்டியது அவசியம் ஆகும்.

தவிர்க்க‍வேண்டிய உணவுகள்

பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சமையல் எண்ணெய்களான சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யை தவிர்க்கவேண்டும்.

கடல் சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதோடு, மூட்டு களில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும். ஆகவே சர்க்கரை சேர்க்காமல் இருப்ப‍து நல்ல‍து

யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகு மே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்து விட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண் டும்.

காரம், வறுத்த உணவுகள், டீ, காபி, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

காய்கறிகளில் கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்  போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: