Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரைமுறை தேவை – வளமான சமூக(வலை தள)த்திற்கான விதை இது!

வரைமுறை தேவை – வளமான சமூக(வலை தள)த்திற்கான விதை இது!

வரைமுறை தேவை – வளமான சமூக(வலை தள)த்திற்கான விதை இது!

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில், நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்

த‌கவல் தொடர்பின் விஸ்வரூப வளர்ச்சிதான் வலைதளங்கள், உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அடுத்த‍

நொடியில் அது நம் விரல் நுனியில் . . .

புறா காலில் கடிதம், ஒற்ற‍ன் மூலமாக தகவல், ஊரு க்குச் சொல்ல தண்டோரா, தபால், தந்தி, பேஜர், தொ லைப்பேசி, அலைப்பேசி, மின்னஞ்சல் இப்ப‍டி குறுகி ய காலத்திற்குள் தகவல் தொடர்பின் எல்லை பரந்து விரிந்தாலும் அதன் கட்டுப்பாடு நம் கைக்குள் அடங்கிவிட்டது.

இணைய தளங்கள், வலைப்பூக்கள், யூ-டியூப் வீடியோக்கள், முகநூல், வாட்ஸ் அப், எஸ்.எம். எஸ். இவைகளின் நன்மையும் ஏராளந்தான். நே ரமும், விஷயங்களைத்தேடிச்செல்லும் உழை ப்பும் மிச்ச‍மாகிறது தான். கண் இமைக்கும் நேரத்தில் நம்முன் கண் ணன் வாயில் தெரிந்த உலகமே தெரிகிறது. என்பதெல்லாம் உண்மை தான். ஆ னால் இதன் மறுபக்க‍த்தை நினைத்தால் இரத்த‍ம் உறை கிறது. கோபம் கொதிக்கிறது. வருத்த‍ம் வாட்டுகிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, விமர்சன உரிமை, தகவல் தார்மீகம் என்ற பெயரில் வலைதளங்கள் இன்று நாறிக் கொண்டிருக்கின்றன• தரக் குறைவான விமர்சனங்களால் எவரையும் எப்ப‍டி வேண்டுமானாலும் கிழிக்கி றார்கள். நேரடிக்காட்சி என்ற பெயரில் மனிதனின் தலையை வெட் டுகிறார்கள். மனித உறுப்புக்களை அறுத்து அப்ப‍டியே சாப்பிடுகிறா ர்கள். வேறொரு பெண்ணின் திறந்தமேனி உடலுக்கு பிரபலமானவர்களின் தலையைப் பொருத்தி அசிங்கப்படுத்துகிறார்கள்.  இப்ப‍டியாக பாலியல் படங்களும், வன்முறை காட்சிகளும், வலைதளங்களை கொலைக் களங் களாக்கி கொண்டுள்ள‍ன•

நகைச்சுவை வேறு நக்க‍லடிப்பது வேறு என்பதை புரிந்துகொள்ளாத சில அதிமேதாவிகள், பல தலை வர்களின் தனிப்பட்ட‍ வாழ்க்கையை தலைக் கீழாகப் புரட்டிப் பபோடுகின் றனர். வலைதள வம்புக்காரர்களால் எத்த‍னையோ பிரபலங்கள் பல முறை செத்துப் பிழைத்திருக்கிறார்கள். அரசின் அறிக்கையை கூட போலியாக தயாரித்து வெளியிடுவதெல்லாம் விபரீத த்தின் உச்ச‍ம்.

போலி லாட்ட‍ரிகளும், பத்து பேருக்கு தகவல் அனுப்பினால், பலன் இல் லையேல் பாதகம், போன்ற மிரட்ட‍ல் தகவலகளும், எதை வேண்டு மானாலும் வாங்கலாம். விற்கலாம் என்கிற ஏமாற்று வர்த்த‍கங்களும், இரகசியமாய் படம்எடுத்து, பணம்தராவிட்டால், இணையதளத்தில்வெளி யிடுவோம் என்கிற பகல்கொள்ளையும் இணைய தளங்களின் இன்னொரு மோசடி முகம்.

இப்ப‍டி வரம்பு மீறுபவர்களை தண்டிக்க வழி செய்த ஒரு சட்ட‍த்தை (66ஏ) மனிதஉரிமை, கருத் து சுதந்திரம் என்று எங்கோ தெரு முனையில் கூச்ச‍ல் இடுபவரகளுக்கு பயந்து அரசு திரும்பப் பெற்றுவிட்டது.

நம் கையை நாம் எப்ப‍டி வேண்டுமானாலும் வீசலாம் அது சுதந் திரம், அப்ப‍டி வீசும்போது அது அடுத்த‍வன் மூக்கை உரசினால் அது உரிமை மீறல் ஆகும். இந்த அடிப்படையை புரிந்து கொண் டு வலை தளங்களின் செயல்பாடுகளுக்கு வரைமுறை வகுக்க வேண்டும். இதுதான் எல்லை என்ற இலக்கு நிர்ணயிக்க‍ வேண் டும். எல்லையை மீறினால் கடுமையாய் தண்டிக்க‍ வேண்டும். சட்ட‍ம் ஒரு புறமிருக்க‍ட்டும். நாம் என்ன‍ செய்ய‍ வேண்டும்.

நாம் நல்ல‍தையே பார்ப்பேன், நல்ல‍தை மட்டுமே தேடுவேன். என்கிற வரைமுறை நமக்குள் இருந்தால் வலைதளங்களின் மாய வலையில் நாம் விழமாட் டோம் அல்லவா?

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\|

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: