Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பில் கேட்சுக்கு நம்ம ஊர் நாகராஜன் எழுதிய பகீர் கடிதம்!

பில் கேட்சுக்கு நம்ம ஊர் நாகராஜன் எழுதிய பகீர் கடிதம்!

பில் கேட்சுக்கு நம்ம ஊர் நாகராஜன் எழுதிய பகீர் கடிதம்!

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய நம்ம ஊர் நாகராஜன், சிறிது நாட்களில்

பில்கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:
அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூ ட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்கு க்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக்கொ ண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத் தவும்.

3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும் தான் உள்ளது.

4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்ய வில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, ‘Find பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் ‘Microsoft word கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6.விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7.’Microsoft office’உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில் தான் பயன்படுத்துகிறேன்.

8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்ல வேளை, ‘My Secret Places கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தர வே ண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறே ன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்ப வில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

இப்படிக்கு,
நாகராஜன்

———————————–
முகநூலிலிருந்து . . .
———————————–


கூடுதலாக விதை2விருட்சம் இணையத்தால் சேர்க்க‍ப்பட்ட‍ பகுதி இது

v

இந்த கடிதத்தைப் படித்த‍ பில் கேட்ஸ்ஸின் இன்றைய நிலை

(அய்யோ பாவம், அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரே!)

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: