Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஷ்ய சிறையில் நேதாஜி …. ? கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும்!

ரஷ்ய சிறையில் நேதாஜி …. ?  கொடூரத்தின் கொடுமைகளும்  திடுக்கிடும் தகவல்களும்!

ரஷ்ய சிறையில் நேதாஜி …. ?  கொடூரத்தின் கொடுமைகளும்  திடுக்கிடும் தகவல்களும்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை

வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ரஷியாவின் உளவு அமைப்புகளான கே.ஜி.பி, ஸ்மெர்ஷ், ஜி.ஆர்.யூ ஆகியவற்றிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 லட்சம் ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன.

1917ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையி லான காலகட்டத்தில், ரஷியாவின் “குலாக்’ முகா ம்கள் (கட்டாயத் தொழிலாளர் முகாம்) தொடர்பாக அந்நாட்டு உளவுத் துறைகள் அளித்த அறிக்கைகளு ம் அதில் அடங்கும். குலாக் முகாமில்தான், இந்தி யாவின் சுதந்திரத்துக்காக “இந்திய தேசிய ராணுவ ம்’ (ஐஎன்ஏ) என்னும் படைப்பிரிவை உருவாக்கி போரிட்ட நேதாஜி, பிற போர்க்கைதிகள், அரசியல் அதிருப்தியாளர்களு டன் சிறை வைக்கப்பட்டி ருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

சோவியத் குடியரசின் (தற்போது ரஷியா) முன்னாள் உளவாளியும், 1934 ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு ரகசியப் பயிற்சி அளித்தவரும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, குலாக் முகாமில் பணியாற்றியவருமான குஸ் லோவ், யா கூட்ஸ்க் சிறையில் 45ஆம் எண் சிறை யில் நேதாஜி அடைக் கப்பட்டிருந்ததாகக் குறி ப்பிட்டார். இந்தியாவில் 1930ஆம் ஆண்டுக ளில் சோவியத்தின் உளவாளியாக செயல் பட்ட குஸ்லோவ், நேதாஜியை நன்கு அறிந்தவர். கொல்கத்தாவில் நேதாஜியை அவர் சந்தித்துப் பேசி யிருக்கிறார்.

இதேபோல், சோவியத்தின் மற்றொரு உளவாளியும், சைபீரியா சிறைக் கைதியாக இருந்தவருமான கார்ல் லியோனார்டும், சைபீரியச் சிறையில் நேதாஜிஅடைக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஜவாஹர்லால் நேரு தலைமை யிலான அரசு, அத்தகவலை நிராகரித்துவிட்டது. அமெரிக்கா வின் பொய்ப் பிரசாரம் அது என நேரு அரசு தெரிவித்து விட்ட து.

எனினும், இதுகுறித்து நேருவின் முன்னாள் உதவியாளரான டாக்டர் சத்ய நாராயண் சின்ஹா கூறுகையில், “ஜெர்மனியில் இருந்து ஜெனரல் ஸ்டூவர்ட், மேஜர் வாரன் ஆகியோர் 1946ஆம் ஆண்டு அனுப்பிய குறிப்புகளில், நேதாஜி சாகவில்லை; அவர், ரஷியர்களால் துன்புறுத்தப்பட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந் தது’ என்றார்.

கேஜிபி, ஜிஆர்யூ, சேகா, என்கேவிடி, ஸ்மெர்ஷ், எம்.ஜி.பி. ஆகிய உளவு அமைப்புகளிடம் இருந்த மிகவும் ரகசியமான ஆவணங்களை வெளியிடு வது தொடர்பான முடிவு, உக்ரைன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது. 1918ஆம் ஆண்டில், “பதிவு இயக்குநரகம்’ என்ற பெயரில் ஜிஆர்யூ உளவு அமைப்பு உருவாக்கப்பட் டது. 1942ஆம் ஆண்டு, அதன் பெயர் ஜிஆர்யூ என மாற்றப்ப ட்டது. 1943ஆம் ஆண்டு, ரஷியாவின் அப்போதைய அதிபர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது ஸ்மெர்ஷ். சோவியத் யூனியன் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை கவனிக்க 1954ஆம் ஆண்டில் கேஜிபி உளவு அமைப்பு ஏற்படுத்தப் பட்டது.

1991ஆம் ஆண்டில், உக்ரைன் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அந்த ஆவணங்கள் அனைத்தும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளா ல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

அந்த ரகசிய ஆவணங்களை இணையதள வலைதளப் பக்கத்தில் வெளி யிட உக்ரைன் அரசு திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிட்டால் குலாக் முகாமில் இருந்த கைதிகள் குறித்தும், அவர்கள் மாயமானது குறி த்தும் பல்வேறு தகவல்கள் வெளிச்ச த்துக்கு வரும்.

சைபீரியாவில் குலாக் முகாம்களில் இருந்த கைதிகள் அனைவரும், நிலக் கரிச் சுரங்கப் பணிகளிலும், சாலை கள், அணைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு முகாமிலும், 500 முதல் 1,000 கைதிகள் இருந்ததாகவும், உல கிலேயே கடும் குளிர் நிறைந்த பகுதி யான சைபீரியாவில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது, அவர்களில் பெரும்பாலா னோர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகி றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக இந்திய தேசிய ராணுவம் என்னும் படையை உருவாக் கிப் போரிட்டவர் நேதாஜி. 2ஆம் உலகப் போரின் போது அவர் சென்ற விமானம் தைவானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நேதாஜி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆ னால், நேதாஜியின் ஆதரவாளர்கள் இதை நம்பாததால் சர்ச்சை நீடிக்கிற து. ரஷியாவின் சைபீரியா சிறையில் நேதாஜி துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிலரும், இந்தியாவின் வடமாநிலங்களில் துறவி போ ன்று நேதாஜி வாழ்ந்து மறைந்ததாக சிலரும் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் நாடாளுமன்றம் எடுத்த முடிவுப்படி, குலாக் முகாம்கள் தொடர்பான ரகசிய ஆவண ங்கள் வெளியிடப்பட்டால், நேதாஜி தொடர்பான நமது சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை கிடை த்து விடும்.

மேலும் பல ஆவணங்களை வெளியிட அரசு நடவடிக்கை?

நேதாஜி தொடர்பான ஆவணங்கள் குறித்த செய்தியை எக்ஸ்பிரஸ் நாளி தழ் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச் சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும், மேலும் பல ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான திட்டத்தை வகுக்கும் பணியில் ஈடுபட்டு ள்ளன.

நேதாஜி தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தி டம் 29 ரகசிய ஆவணங்களும், பிரதமர் அலுவலகத்திடம் 60 ஆவண ங்களும் உள்ளன.

=> படித்தச் செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: