Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதுக்கு எப்படி 5 மார்க் போட்டாங்க! (கொஞ்ச ஓவராத் தான் இருக்கு)

இதுக்கு எப்படி 5 மார்க் போட்டாங்க! (கொஞ்ச ஓவராத் தான் இருக்கு)

இதுக்கு எப்படி 5 மார்க் போட்டாங்க! (கொஞ்ச ஓவராத் தான் இருக்கு)

ஒரு மாணவனோ அல்ல‍து மாணவியோ எழுதிய தேர்வுத்தாளில் அந்த மாணவன் அல்ல‍து மாணவி, ஒரு

கேள்விக்கு எழுதிய பதிலை, கொஞ்சம் நீங்களும் படியுங்களேன். முகநூலில் கிடைத்த‍ அந்த விடைத்தாள் ஒளிப்படத்தை இங்கே கீழே பகிர்ந்துள்ளேன்.

ஒரு கேள்விக்கு அந்த மாணவனோ அல்ல‍து மாணவியோ இப்ப‍டி ஒரு பதிலை எழுதியதற்கு, 5 மார்க் போட்டிருக்காங்க,

இதுல எனக்கு ஒரு சந்தேகம்

இந்த பதிலை எழுதிய மாணவனுக்கு அல்ல‍து மாணவிக்கு புத்திமதி சொல்வதா?

இந்த பதிலுக்கும் 5 மார்க் போட்ட அந்த ஆசிரியருக்கு புத்திமதி சொல்வதா?

என்னைப்பொறுத்த‍ வரை முதலில் அந்த ஆசிரியருக்குத்தான் புத்திமதி சொல்ல‍ வேண்டும். ஏனென்றால், அந்த மாணவன் அல்ல‍து மாணவி எழுதிய இதுபோன்ற பதிலை ஊக்குவிக்கும் விதமாக 5 மதிப்பெண் போட்டிருக்காரே! இதனால் பலன் அடைந்த அந்த மாணவனோ அல்ல‍து மாணவியோ, தான் இப்ப‍டி எழுதியதால்தான் நமக்கு மார்க் கிடைத்திருக்கு. ஆகவே அடுத்த‍ தேர்விலும் இது போன்று எழுதினால் மார்க் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பை அவனுக்கு உண்டாக்குமே. மேலும் படித்து விட்டு தேர்வு எழுதவேண்டும் என்ற எண்ண‍ம் போய்விடும் அல்ல‍வா!

இந்த விடைத்தாள் திருத்திய அந்த ஆசிரியர் இந்த பதிலை முற்றிலுமாக புறக்கணித்து இதற்கு மதிப்பெண் எதுவும் வழங்காமல், இருந்தாலே போ தும் இந்த மாதிரியான பதிலை எழுதிய அந்த மாணவனுக்கோ அல்ல‍து மாணவிக்கோ புரிய வைக்க‍முடியும்.

தன்னிடம் படிக்கும் மாணவனோ அல்ல‍து மாணவியோவாக இருந்தால் அவர்களை நேரில் தனியே அழைத்து அவள் அல்ல‍து அவன்செய்த தவ றை கனிவுடன் சொல்லி, அவன் அல்லது அவள் இதுபோன்ற தவறினை மீண்டும் செய்யாமல் திருத்த‍ வேண்டும்.

மாணவ மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை மட்டுமே திருத்துவது என்பது ஒரு ஆசிரியரின் கடமைஆகாது.

அந்த மாணவ மாணவிகளையும் சேர்த்து திருத்தி நல்வழிப்படுத்துவதே ஒரு ஆசிரியரின் பரிபூரண கடமையாகும்.

என்ன‍ங்க நான் சொல்வது சரிதானே!

=> விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: