Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்ட‌ பிரதமர் – பரபரப்பு

பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்ட‌ பிரதமர் – பரபரப்பு

பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்ட‌ பிரதமர் – பரபரப்பு

 “பிரதமர், நான் பணிபுரியும் ஹோட்டலுக்கு வரும்போதெல்லாம் என் முடியைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்து

என்னை அழ வைக்கிறார். ஒருமுறை, இனிமேல் இப்படி நடந்து கொண்டால் அவரை உதைப்பேன் என்று அவரின் பாதுகாவலரிடம் சொன்னேன்” என்று ஒருஹோட்டல் பணிப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியு ள்ளார்.

இந்த விவகாரம் சூடுபிடித்ததும் பிரதமர், “நான் தொடர்ந்து செல்லும் ஹோட்டல் என்பதால் அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். விளையாட் டாக அவரின் முடியைப் பிடித்து இழுப்பேன். இது அப்பெண்ணுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந் தால் மன்னிப்புக் கோருகிறேன்” என்று கடிதம் அனுப்பி னார். கடிதம் மட்டும் அனுப்பிவிட்டு பொத்திக்கொண்டி ருக்க வேண்டியது தானே. கடிதத்துடன் 2 ஷாம்பெய்ன் (மது)பாட்டில்க ளையும் சேர்த்து அப்பெண்ணுக்கு அனுப்பி விட்டார்.

“இது முடியைப்பிடித்து இழுத்ததைவிடக் கொடுமை யானது” என்று அந்தப் பெண்கூற மீண்டும் பிரதமருக்கு எதிராக அனல் பறக்கிறது. கையைப் பிசைந்து கொண் டிருக்கிறார் பிரதமர்.

இந்த சம்பவம் நடந்தது நியூசிலாந்து நாட்டில். பணிப்பெண்ணின் மயிரை இழுத்தவர் நியூசிலாந்து பிரதமர் ஜான் கே.

முகநூலில் நண்பர் முகம்ம‍து சபீக் சமுரா பகிர்ந்த பதிவு இது!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: