மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன பதிலும்! – அரிய தகவல்
மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன பதிலும்! – அரிய தகவல்
பாற்கடலில் விஷ்ணுவைச் சந்திக்க நாரதர் வந்து விஷ்ணுவை தரிசித்து அப்படியே அருகில் இருந்த
லட்சுமியையையும் வணங்கினார். அதன்பிறகு நாதருக்கும் மகா லட்சுமிக்கும் இடையே நடந்த உரையாடல் இதோ உங்களுக்காக
நாரதர் – தாயே! நீ எங்கெல்லாம் குடியிருக்க விரும்புவாய்?
மகாலட்சுமி- நாரதரே! தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக்குவியல், அன்னதானம் செய்யும் இடம், பசு கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமை யாகப்பேசுபவர், சுறுசுறுப்புமிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் துõய்மை காப்பவர், உணவின் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக் காலை துடைத்து விட்டு தூங்கச் செல்பவர், உடல் சுத்தம் பேணுபவர், கூந்தலை எப் போதும் பின்னி முடித்த பெண்கள், கற்புக்கரசிகள் ஆகியோர் இருக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருப் பேன்.
நாரதர்- நன்றி தாயே! மக்கள் வாழ அடிப்படையில் செல்வம் தேவை! அந்த செல்வத்தின் மூலப்பொருளாகிய நீங்கள் எங்கெல் லாம் வாசம் செய்கிறீர்களோ அங்கெல்லாம் செல்வம் தழைத் தோங்கும் என்பதை சொல்லி மக்களுக்கு நல்லதொரு வழி யினை காட்டினீர் என்று சொல்லி விடைபெற்றார்.
=> தினகரன்
நாரதர் கேட்க மறந்த கேள்வியை நான் கேட்கிறேன். இதற்கு மகாலட்சு பதில் சொல்ல வேண்டாம். எங்கே நீங்கள் சொல்லுங் கள்.
எனது கேள்வி- எல்லாம் சரி, ஆனால் கூந்தலை எப்போதும் பின்னி முடித்த பெண்களிடம் வாசம் செய்வேன் என்று சொல்லி யிருக்கிறாளே! அது எப்படி சாத்தியம்!
இந்த காலத்து இளம்பெண்கள், அவர்களது கூந்தலை எப்போ தும் விரித்து போட்டபடிதானே! இருக்கிறார்கள்! பின்னலிட்ட கூந்தல் உடைய இளம் பெண்களை பார்ப்பது அரிதாகி விட்டதே ! பின் எப்படி அது சாத்தியம்?
குறிப்பு
பெண்களே! திருந்துங்கள். நீங்கள் உங்கள் கூந்தலை பின்ன லிட்டால்தான் மகா லட்சுமி உங்களுடன் வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கிறது என்பதை மேற்சொன்ன வரிகள் மூலமாக புலப்படுகிறது. ஆதலால் கூந்தலை விரித்துப் போட்ட பெண்களே! உங்களது விரித்துப்போட்ட கூந்தலை உடனே சீவி சிக்கெடுத்து பின்னி அழகிய பின்னலாக போட்டுக்கொள்ளுங்கள்.
விதை2விருட்சம்
v good