Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளும்! – அதற்குரிய விளக்க‍ங்களும்!

கணிணி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளும்! – அதற்குரிய விளக்க‍ங்களும்!

கணிணி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளும்! – அதற்குரிய விளக்க‍ங்களும்!

நாம் கணிணியைப் பயன்படுத்தி வருகிறோம். அதில் பல தொழில் நுட்ப வார்த்தைகள் பயன்பட்டு வருகின்றன• இந்த தொழில் நுட்ப வார்த்தைகளுக்கு என்ன‍ அர்த்த‍ம், என்ன‍ பொருள் என்று தெரியுமா என்றுகேட்டால்,

தெரியாது என்றுதான் பதில்வரும். தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ள‍ முயலும்போது தொழில் நுட்ப வார்த்தைகளுக்கான முழுமையான அர்த்த‍ங்களை தெரிந்து கொண்டு, அவை எதற்காக பயன்படுகிறது என்பதனை நாம் அறிந்துகொண்டு கணிணியை பயன்படுத்தினால், இதுபற்றி தெரியாமல் இருக்கும் உங்களது தோழியோ அல்ல‍து தோழரோ, வரும்போது நீங்கள் இதுபற்றி சொன்னால், அவர்களுக் கு உங்கள்மீது இருக்கும் மதிப்பு கூடும் அல்ல‍வா! 

* ஐ.பி. அட்ரஸ் (IP Address):

கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணை க்கப்பட்டு  உள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.

* ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling):

கம்ப்யூட்டர்பைலில்உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப்பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ்செய்து வைத் துக்கொள்வது. இதனால் அதனை உருவாக்கிய வர் மற்றும் பெறுபவர் மட்டுமே சரிசெய்து படிக்க முடியும். இதனை சரிசெய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

* மதர்போர்ட் (Motherboard):

பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணை க்கப்பட்டு இயங்குகின்றன.

* பயாஸ் (BIOS – Basic Input Output System):

அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறியபுரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோ கிராம், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போ ன்ற அடிப்படை சாதன ங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்க த்திற்கு வழிவிடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

=> முருகானந்தா

Leave a Reply

%d bloggers like this: