Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . – ஓர் அலசல்

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . – ஓர் அலசல்

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . – ஓர் அலசல்

இன்ஷூரன்ஸை பொறுத்தவரையில், வேலைக்குச் செல்லும் பெண்களு க்கு இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன. ஏனெனில்,

இன்ஷுரன்ஸ் என்பது ஒரு குடும்பத்தின் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக மட்டுமே என்று கருதுவதனால்தான். உதாரணத்துக்கு, ஒரு ஆணோ, பெண்ணோ வேலைக்குச் சென்றால், அவர்கள் ஈட்டும்வருமானத்தை வைத்து, அவர் களுக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் தேவை என்று கண்டறியப்படுகிறது.

ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யவேண்டுமா, வேலைக்கு ப் போகாமல் குடும்பப் பொறுப்புகளை நிர்வகி க்கும் இல்லதரசிகளுக்கு ஏன் இன்ஷூரன்ஸ் இல்லை என்கிற கேள்வி எழுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இல்லத்த ரசிகள் அவர்களின் வாழ்நாளின் பெறும் பகுதி யை தங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளி ன் முன்னேற்றத்துக்காகவே  செலவு செய்கின்றனர். அவர்களின் நேரம் முழுவதும், குடும்பத்தினருக்கு உணவு தயாரிப்பது, குழந்தைகளுக் குக் கல்வி கற்பிப்பது முதல்  அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது என்ற வடிவில் ஒரு குடும்பத்துக்கு முக்கிய பங்களிப்பாக இருப்பது குறி ப்பிடத்தக்கது. இல்லத்தரசிகள் மனப்பூர்வ மாக, பாசத்தோடுசெய்யும் இந்த செயல்பாடு கள் விலை மதிப்பிட முடியாதவை. அதற் கெல்லாம் இவ்வளவு தான் சம்பளம் என ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனாலும் ஒருபேச்சுக்கு அவர்கள் செய்யும் செயல்பாடுகளுக்கு பண அடிப்படை யில் குறைந்தபட்ச அளவிலான மதிப்பீட்டை செய்து பார் த்தால், உண்மையாகவே பெண்களின் பங்களிப்பை நம்மால் உணர முடியும்.

சிறுவர் பராமரிப்பு!

ஒரு தனிநபர் வருமானம் ஈட்டும் வீட்டில், இல்லத் தரசிகள் குழந்தைக ளைப்பராமரிக்கும் பொறுப்பை சிறப்பாகச் செய்கின்றனர். இந்தப் பொறுப்பை அவர் கள் செய்யாமல், குழந்தையை பராமரிப்பு மையத்தி ல் வைத்து பராமரிக்க வேண்டுமெனில், குறைந்த பட்சம் மாதமொன்று க்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை ஆகிறது. இதுவும் ஒரு குழந்தைக்கு மட்டுமே. 2 குழந்தை என்றால் பராமரிப்புச் செலவு இருமடங்காக உயரும். மேலும், குழந்தைகளை, பள்ளிக்கு அழைத்துச்சென்று, திரும் ப அழைத்து வருவதற்கு மட்டுமே மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 வரை செலவாகும்.

சமையல் கலை!

ஒவ்வொரு இல்லத்தரசியும் குழந்தைகளின் தேவை க்கேற்ப அன்போடு உணவு தயாரிக்கிறார்கள். இதற் காக, அவர்கள் எந்தவிதமான பலனையு ம் எதிர்பாரா மல், அனைவருக்கும் ஆரோக்கியமான உணவை தயார் செய்து தருகின்றனர். இந்த சமையல் கலை சேவையை அவர்கள் இல்லாதபோது, நன்கு சமைக்க த் தெரிந்த ஒருவரை வைத்து செய்தால் மாதமொ ன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும்.

வீட்டுப் பராமரிப்பு!

நாம் இருக்கும் வீட்டை சுத்தமாக பேணிப் பாதுகா த்து நிர்வகிப்பதை கலைநயத்துடன் ஒவ்வொரு இல்லத்தரசியும் சிறப்பாகச் செய்கின்றனர். அவர்க ள் இல்லாதபோது, ஒரு பணியாளரை நியமனம் செய்து வீட்டை ஒருநாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஆகும் செலவு மாதமொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 ஆகும்.

இதற்கான தீர்வுகள்!

ஒரு உதாரணத்துக்காக இப்படி வைத்துக் கொள்வோம். வீட்டில் இல்லத்த ரசிகள் இல்லாத சூழல் வருகிறபட்சத்தில் மேற்கூறிய பொறுப்புக் களைச் செய்துமுடிக்க ஆகும் செலவை குறைந்த அல்லது நடுத் தர வருமானம் வாங்கும் ஒரு குடும்பத் தலைவரால் நிச்சயம் சமாளிக்க முடியாது. பணக்காரக் குடும்பங்க ளால் மட்டுமே இந்த பண இழப்பை சிறிதளவு சமாளிக்க லாம். இந்த பிரச்னைக்கு மிக நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழி என்றால் அது ஆயுள் காப்பீடுதான். குடும்பத்தில் ஒரு தலைவி இல்லாதபோது ஏற்படும் இந்தச் செலவுகளுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000 எனக் கொண்டால், அந்தத் தொகை கிடைக்குமளவுக்கு ஒரு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது மிகவும் நல்ல து.

லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இல்லத்தரசி களுக்கு டேர்ம் இன் ஷூரன்ஸ் வழங்குவதில் பலவிதிமுறைகளை வைத்துள்ளது. ஒரு இல்ல த்தரசியின் கணவரின் வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்றும், இல்லத்தரசிகள் பட்டப் படிப்பு முடித்திருக்க வே ண்டும், மருத்துவப் பரி சோதனை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்றும் சொல்கின்றன. மேலும், கவரேஜின் அளவு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சமாகவும் அதிகபட்சமாக ரூ.25 லட்சமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. ஆரோக்கியமான 30 வயதுள்ள ஒரு இல்லத்தரசிக்கு 30 வருடத்துக்கு, ரூ.25 லட்சம் ஆயுள் காப் பீடு எடுக்க சுமாராக ஆண்டுக்கு ரூ.3,000 பிரீமியம் கட்டினால் போதும்.

ஆனால், பாரம்பரிய பாலிசிகளான எண்டோவ்மெ ன்ட் பாலிசியை எடுப்பது சுலபம். இருப்பினும், இதி லும் ஒருவருடைய வருமானம், குடும்பப் பின்னணி முதலியவற்றைக் கருத்தில் கொண்டே வழங்கப்படு கிறது. இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும், மேற்கூறிய மதிப்பீட்டைக் கருத்தில்கொண்டு, இல்லத்தரசிகளு க்கு காப்பீடு வழங்கினால், நடுத்தர வர்க்க மக்களு க்கு மிகவும் வசதியாக இருக்கும்.

மருத்துவக் காப்பீடு!

மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அவசியம்.  இவை தவிர, பெண்களுக்கென்று ஒருசில பிரத்தியேக காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. உதாரணத்துக்கு, பெண்கள் சம்பந்த நோய்களான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய், மகப்பேறு மற்றும் மகப்பேறு சம்பந்தமான நோய்களை கவர் செய்யும் பிரத்தியேக பாலிசிகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

எஸ்.ஸ்ரீதரன்
தலைவர்(நிதித் திட்டமிடல்),
ஃபண்ட்ஸ் இந்தியா.காம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: