Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிளம்ஸ் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பிளம்ஸ் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பிளம்ஸ் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

இயற்கை நமக்கு எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்களையுடைய காய் கனிகளை நமக்கு வழங்கியுள்ள‍து. அவற்றில் ஒன்றுதான் இந்த

பிளம்ஸ் பழங்கள் ஆகும்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ள இந்த பிளம்ஸ் பழத்தில் இசாதின்(Isathin) என்றொரு வேதிப் பொருள் நிறைந்து காணப் படுகின்றனது. இந்த வேதிப் பொருளானது மனித உடலில் உள்ள‍ ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைத்து மலச்சிக்கலையும் நீக்கி ஆரோக்கியத்தை கூட்டும்.

இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது. நுரையீரல் மற்றும் வாய் புற்று நோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது.

பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ள பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின்-கே உள்ளது.

Blood fats

இது ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடியது. மேலும், ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்க ளை கரைக்கும் குணமுடையது.

நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்பு களுக்கு அதிக பலம் கொடுக்கும். இளவயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால், உடல் புத்துணர்வு பெறும்.

– ஸ்ரீ லிங்கா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: