Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஷக்கிருமிகள் – தாலி அன்பின் அடையாளமா? அடிமைச் சின்ன‍மா?

விஷக்கிருமிகள் – தாலி அன்பின் அடையாளமா? அடிமைச் சின்ன‍மா?

விஷக்கிருமிகள் – தாலி அன்பின் அடையாளமா? அடிமைச் சின்ன‍மா?

{2015 ஆம் ஆண்டு மே மாத இதழில், நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்}

ஊரெல்லாம்கூடி உள்ள‍ன்புடன் வாழ்த்த, தாலிக்கட்டுவது என்பது உணர்வு பூர்வமான உண்மையான உயர்ந்த நாகரீகம். ஊரை விலை கொடுத்துக் கூட்டி, வீண் வம்புக்காக

தாலியறுப்ப‍து என்பது உணர்ச்சியைத் தூண்டிவிடும் பொய்யான பண்பாடற்ற‍ அநாகரீகம்.

குத்தறிவுக்கொள்கை, மூட நம்பிக்கையொழிப்பு, மனித உரிமை என்ற போர்வையில் சில போராட்ட ங்கள் ஆங்காங்கே அவ்வ‍ப்போது நடைபெறுகின்ற ன• விளம்பரவெளிச்ச‍ம் பெறுகின்றன• காணாமலும் போகின்றன•

தாலியகற்றுவது, பூணூலையறுப்ப‍து, சிலையை செருப்பாலடிப்ப‍து என்பது மட்டுமே பகுத்தறிவு என்று பறைசாற்றுகின்ற, சிலரால், சிலுவையை அகற்றுவது, பர்தாவை நீக்குவது, தொப்பியை கழற்றுவது போன்றவற்றை செய்ய முடிவதில் லையே ஏன்? காரணம் பயம், சிறுபான்மையின ரையா சீண்டுகிறாய்? என்று போராட்டம் வெடிக்கும். வாக்குவங்கிக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் ஆத்திரமாய் அறிக்கை விடும்.

தாலியைக் கழற்றினால்தான் புரட்சி, தாலி என்ன‍ அடிமை வேலியா? என்று பேசினால் தான் புதுமைப் பெண்கள், கடவுள் மறுப்பு மட்டுந்தான் பகுத்தறிவு என்ப தெல்லாம் தங்களை விளம் பரப்படுத்திக் கொள்ளும் வியாபாரிகளின் விபரீத சிந்தனைகள் தானே தவிர, ஒற்றுமையைக் குலைக்கும் உதவாக்கரை செயல்கள்தானே தவிர, உருப்ப‍டியான உயர்ந்த நோக்க‍ம் எதுவுமி ல்லை.

தலைவர்களை சிலைகளாக்கி, பிறந்தநாள் கொண்டா ட்ட‍ம், மாலையிட்டு வணங்கலாம். வழிபடலாம். அன்ன‍ தானம் செய்ய‍லாம், அவர்களின் பெயரை அடைமொழி யாக்கிக் கொள்ள‍லாம், அது தவறில்லை, ஆனால், மனித உருவில் தெய்வங்களை வடித்து, கிருஷ்ணர், இராமர், இயேசு, மாதா என்று பெயரிட்டு வணங்கி வழிபட்டால் மட்டும் தவறாம். என்னங்கடா இது நியாயம்? என்று எதிர்ப்பார் யாருமில் லை என்பது வேதனைக்குரியது.

அவ்வ‍ப்போது எதையாவது பேசி, எதையாவது செய்து சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டி ருக்கும் மக்களிடையே வெறுப்பைத் தூண்டி கலவரம் எழ வைத்து அதை அரசியலாக்கி அந்த நெருப்பில் குளிர் காய்வதைத் தவிர இதுவரை இந்த சிலரால் பேறு என்ன‍ சாதிக்க முடிந்திருக்கி ன்றது?

அங்கொன்றும் இங்கொன்றுமாயிருக்கிற அந்தணர்களை எவ்வ‍ளவுதான் அசிங்கப்படுத்தினாலும் அவர்கள் எதிர்க்காதது, துஷ்டனைக் கண் டால் தூர விலகு என்று விலகியிருப்ப‍துதானே! இயலாமையால் அல்ல, அதேபோல் பெரும்பான்மையான இந்து மதத்தை மட்டுமே இழிவுபடுத்தினாலும் அவர்கள் அமைதிகாப்பது பெருந்தன்மை யான நாகரீகம் தானே தவிர இளிச்சவாயர்கள் என்பதாலல்ல‌

க‌டவுள் உண்டா? இல்லையா? தாலி அன்பின் அடையாளமா? அடிமைச் சின்ன‍மா? என்றெல்லாம் விவாதிக்கலாம் தப்பில்லை. ஆனால் விபரீத எண்ண‍ங்களுடன் களத்தில் இறங்கி காயப்படுத்துவதுதான் விஷமத்தனமானது.

சகோதரத்துவத்துக்கு சாவுமணியடிக்கும், ஒற்றுமையை உருக்குலைக்கும் இந்த விஷக்கிருமிகளை விலக்கா விட்டால், மனிதநேயம் மரித்துப் போகும் என்கிற உரத்த‍ சிந்தனையை ஊரெங்கும் உரக்க‍ச் சொல்வோம்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\|

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: