Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குபேரன் தம்பி இராவணனா? இல்லை இராவணன் அண்ண‍ன் குபேரனா? – ஊரறியா ஓரரிய ஆன்மீகத் தகவல்

குபேரன் தம்பி இராவணனா? இல்லை இராவணன் அண்ண‍ன் குபேரனா? – ஊரறியா  ஓரரிய ஆன்மீகத் தகவல்

குபேரன் தம்பி இராவணனா? இல்லை இராவணன் அண்ண‍ன் குபேரனா? – ஊரறியா  ஓரரிய ஆன்மீகத் தகவல்

இந்தியாவில் மட்டுமல்ல‍, பிற நாடுகளிலும் இந்த குபேரக் கடவுளை, மக்க‍ள் வெவ்வேறு முறையில் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த

குபேரன் என்பவர் செல்வத்திற்கே அதிபதி ஆவார். அதுசரி, யார் இந்த குபேரன்? அவனுடைய கதை என்ன? என்பது பலருக்குத் தெரியாது.

Kuber Bhandari Temple Karnali

குஜராத் மாநிலத்தில் கர்நாளி என்ற கிராமத்தில் இருக்கிறது புராண காலத்துக் குபேரன் கோயில். இதை திரேதாயுகத்துக் கோயிலென்றும், பாரதநாட்டின் பழமையான ஒரே குபேரன் கோயில் என்றும் கூறுகிறார் கள்.

இந்த குபேரன், யக்ஷர்களின் அரசன். இவனை “குபேர பண்டாரி’ (பொக்கி ஷக்காரன்), சிவமித்திரன் மற்றும் வடதிசை ரட்ச கன் என்றும் அழைப்பதுண்டு. இவன் இலங்கே ஸ்வரனான ராவணனின் மாற்றாந்தாய் மகன். அதாவது அண்ணன் முறை ஆக வேண்டும்!

புராணக்கதையின்படி, பிரஜாபிதா பிரம்மாவின் பேரனான விஸ்வரா என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இத்விதா என்பவள் பரத்வாஜ முனிவரின் புதல்வி. இவள் வயிற்றில் பிறந்தவன்தான் குபேரன். ஒரே பிள்ளை. இரண்டாவது மனைவி கைகசி. இவளுக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தார்கள். புதல்வர்களின் பெயர் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி. கும்பாஷினி லட்சும ணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை.

Ravana British Museum

பௌலஸ்யர், தன் பேரன் குபேரனுக்கு இலங்காதிபதி யாக மகுடம் சூட்டி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது, ராவணனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு அநீதி இழைக் கப்பட்டதாகக்கருதி, அவன் தவம்செய்யலானான். பரமசிவனை மகிழ்வித்து, அவர் கொடுத்த வரத்தின் சக்தியால், குபேரனைத்தோற்கடித்து, பொன்நகரமான இலங்கையையும், குபேரனுக்கு இந்திரன் கொடுத்திரு ந்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றி னான்.

மறுபுறம் நாரதரின் ஆலோசனைப்படி குபேரனும் காட்டுக்குச் சென்று, கடுந்தவம் செய்து, கங்காதரனை மகிழ்வித்து, பல வரங்கள் பெற்றான். சிவபெருமான், அவனை தேவர்களின் செல்வத்தை பொறுப்புடன் கவனிக்கும் பொக்கிஷ தாரனாக்கினார். மீண்டும் தவம் செய்து, சிவபெருமான் பிரசன்னமாகும்போது, அவரை தன்னுடனேயே வந்து இருக்கும்படி வரம் கேட்டான்.

சிவனும் அவன்வேண்டுகோளுக்கு இணங்கி, அவனை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமு ம் கொடுக்கும் சக்தியுள்ள விசேஷ வரத்தை அளித்தார். அதற்குப்பிறகான காலகட்டத்தில், குபேரன் மறுபடியும் அம்பாளை நோக்கித் தவம் செய்து, ராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். அந்த இடம்தான் கர்நாளி என்ற குபேரன் கோயிலிரு க்கும் தலம்.

இந்தக் கோயிலின் விசேஷம், இங்கு குபேரனுடைய விக்ரகமோ, படமோ கிடையாது. வெறும் சிவலிங்கம் மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கிரகத்தின் சுவரில் பார்வதியின் விக்ரகம் இருக்கிறது. பிராகாரத்தில் ஆஞ்சநேயர்,

Modi Temple in Gujarat

பஹுச்சார் அம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகளும் உள்ளன.

குஜராத் செழிப்பாக இருப்பதற்கு இந்த குபேரன் கோயிலும் காரணம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அவரை வழிபடுவதற்கு அமாவாசை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடுகிறார்களாம்.

சுமார் மூவாயிரம் மக்களே வசிக்கும் இந்தக் கிராமத் தில் காயத்ரி, கீதா, சோமநாதர் தெய்வங்களின் கோ யில்களும் இருக்கின்றன். எனினும் குபேரன் கோயி ல் மகிமையே தனி!

அந்த குபேரன் கோயில் எங்கே இருக்கு:

குஜராத் மாநிலத்தில், வடோதராவிலிருந்து (பரோடா) சுமார் 60கி.மீ. தொலைவில் கர்நாளி கிராமத்தில் குபேரன் கோயில் உள்ளது.

– விஜு தி. மலர்

Leave a Reply

%d bloggers like this: