Thursday, December 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீயா நானா கோபிநாத்தை பற்றி …

நீயா நானா கோபிநாத்தை பற்றி

நீயா நானா கோபிநாத்தை பற்றி

கோபிநாத் என்பதை விட நீயா நானா கோபிநாத் என்றால் சட்டென்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு அனைவருக்கும் பரிச்ச‍யமானவர். 

இவர் தொடக்கத்தில்

விஜய் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆன்டெனி அவர்களுடன் இணைந்து நீயா நானா என்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்தளித்துவருவத் மூலம் இவரது சாதனை பயணம் தொடங்கியது. இதோ அவரை பற்றி மேலும் சில குறிப்புக்கள்

இவர், விஜய் தொலைக்காட்சி, தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகி றார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழி நடைக்காகவும், தனிப் பாங்கிற்காகவும்(style) இவர் மிகவும் அறியப் படுகிறார்.

இவர் தொகுத்து வழங்கும் சில முக்கிய மான நிகழ்ச்சிகள்:

    நீயா நானா
    விஜய் விருதுகள்
    குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?
    உன்னால் முடியும்

தற்போது ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:
    “தெருவெல்லாம் தேவதைகள்”,
    “ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!”,
    “நேர் நேர் தேமா”,
    “நீயும் நானும்”

விருதுகள்
    இந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருது- – 2006

    ஜூனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பு வழங்கிய சிறந்த இளம் இந்தியர் விருது – 2008 ஆம் ஆண்டு

கோபிநாத் பயோடேட்டா
பிறப்பு – சூலை 4, 1975
பிறந்த இடம் – அறந்தாங்கி
இருப்பிடம் – சென்னை
கல்வித் தகுதி – பி.பி.ஏ
பணி – தொகுப்பாளர், எழுத்தாளர்
பணியகம் – விஜய் தொலைக்காட்சி
பிரபலபடுத்தியது – நீயா நானா நிகழ்ச்சி
பெற்றோர் – சந்திரன், குமுதம்
வாழ்க்கைத் துணை – துர்கா
குழந்தை – வெண்பா
விக்கிபீடியாவிலிருந்து . . .

0 Comments

Leave a Reply