Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல்

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல்!

புராணம் கூறும் உண்மை

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல் !

சனி பகவான் என்றாலே மக்க‍ள் மத்தியில் ஒரு வித அச்ச‍ம் எப்போதும் உண்டு. காரணம் சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட

சனி பகவான் என்பதால்தான். … சரி இந்த சனி பகவான் பற்றி தெரியும். சனி பகவானின் தாய் தந்தை யார் என்று தெரியுமா? என்று கேட்டால் தெரியாது என்பீர்கள். அதற்காக இந்த பதிவு,

சூரியபகவான், த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலா தேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ் தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலா தேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.

அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.

இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனி பகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.

=< மாலதி ஸ்ரீனிவாசன்

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: