திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை
திருமண அழைப்பிதழை கையில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?
திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக் கொடுக்கும் போதும் தட்டில் வைத்துத்தான் கொடுப்பர்.
அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கை யில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமா யிருந்தால் தட்டு.
இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்கு பவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதில் இல்லை என்பதை காட்டு வற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர் கை மேலும் வாங்குப வர் கை கீழும் இருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதில் தோன்றக் கூடா தென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக் கொடுப்பதையே நம் முன்னோர் கள் பழக்கமாகக்கொண்டிருந்தனர்
இதே முறைதான் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போது இன்றுவரை கடைபிடிக்கப் படுகிறது.
எனவே அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது கூடவே தாம்பூலத் தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்..
=> தட்சணா மூர்த்தி
All Hindus should know these great things.