Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், விளக்கு பூஜையின்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய முக்கிய சில விஷயங்கள்

பெண்கள், விளக்கு பூஜையின்போது  கவனத்தில் கொள்ள‍வேண்டிய முக்கிய சில விஷயங்கள்

பெண்கள், விளக்கு பூஜையின்போது  கவனத்தில் கொள்ள‍வேண்டிய முக்கிய சில விஷயங்கள்

வீடுகளில், கோவில்களில் விளக்கு பூஜை செய்யும் பெண்கள், கண்டிப் பாக தங்களது கவனத்தில் கொள்ள‍

வேண்டிய முக்கிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.

* விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றிய பின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது.

* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக்கொள் ளவேண்டும். திரிகள் புதிதாக வும் கெட்டியானதாகவும் இருக்கவேண்டும்.

*வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

* விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணை விளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.

* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

=>ராகவா

Leave a Reply