காலில் விழாத குறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு?
காலில் விழாத குறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு?
சின்னத்திரை தொகுப்பளார்களில் டி.டி. என்று செல்லமாக அழைக்கப் படும் திவ்யதர்ஷினிக்கு
என்று ஒரு ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு இந்த பட்டாளத்தில் பல பிரபலங்களும் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயமே! காபி வித் DD நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்துவே இவர் தொகுத்த முறை, ஜாலியாக கேள்வி கேட்டமுறை கண்டு உள்ளம் மகிழ்ந்து மனந்திறந்து பாராட் டியுள்ளார் என்பதே இதற்கு சான்று.
அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பங்கேற்பவருக்கும், பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் DDக்கு கை வந்த கலை. அதேபோல் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவை இவரே தொகுத்து வழங்கினார்.
இதில் இவர் மிகவும் சத்தமாக பேசி தொகுத்து வழங்க, இது ரசிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் நேற்று டுவிட்டரி ல் கிண்டலடித்துள்ளனர். இதற்கு டிடி ‘என்னை மன்னியு ங்கள், கண்டிப்பாக அடுத்தமுறை என்தவறை சரிசெய்து கொள்கிறேன்’ என காலில் விழாத குறையாக பகிரங்க மாக மன்னிப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார்.
.
.