Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – உளுந்து சேர்க்காத தோசை

சமையல் குறிப்பு – உளுந்து சேர்க்காத தோசை

சமையல் குறிப்பு – உளுந்து சேர்க்காத தோசை

தேவையானவை

பச்ச‍ரிசி – ஒரு கப்
தோல் சீவிய பூசணித் துண்டு – போதுமான அளவு
குடிநீர் – தேவையான அளவு

செய்முறை:

பச்ச‍ரிசியை ஒரு கப் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு குடிநீரில் போட்டு ஒரு மணி நேரம் நன்றாக

ஊற வைத்து பின் அரைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் அரை கப் தோல் நீக்கிய வெள்ளைப் பூசணித் துண்டுகளை அதே ஜாரில் போட்டு எல்லா வற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து 3 மணி நேரத்திற்குப் பின் தோசை வார்த்தால், அதீத‌ சுவையுடடைய தோசை தயார், மேலும் சாம்பார் அல்ல‍து தேங்காய் சட்னி அல்ல‍து பருப்புப் பொடியை தயாரித்து, தோசையை தொட்டுச் சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் கூடும்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: