Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமர், லக்ஷ்மணனுக்கு அளித்த மரண தண்டனை! – அதிர்ச்சியான ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமர், தன் தம்பி லக்ஷ்மணனுக்கு அளித்த மரண தண்டனை! – அதிர்ச்சியான ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமர், தன் தம்பி லக்ஷ்மணனுக்கு அளித்த மரண தண்டனை! – அதிர்ச்சியான ஆன்மீகத் தகவல்
ஸ்ரீராமரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவரது எல்லா கஷ்டங்களிலும் கூடவே நின்ற அவரது சகோதரன் லக்ஷ்மணனின்

முடிவு (இறந்தது) எப்படி என்று நமக்கு தெரியுமா இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன முதல் கருத்து லக்ஷ்மணனை கொல்ல சொல் லி ராமபிரான் கட்டளையிட்டார் என்பது இதை கேட்கும்போது  நமக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது  இரண்டாவது கருத்து அவர் முடிவுகாலம் தெரிந்ததும் சரயு நதியில் மூழ்கி தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொண்டார் என்பது  ஆனால் முதலில் சொல்லப்பட்டதுபோல  லக்ஷ்மண னுக்கு ராமபிரான் அளித்த மரண தண்டனை.எனபது அதிர்ச்சியான தகவல்தான்  தன் தம்பியறுள் லக்ஷ்மணனை மட்டும் அதிகமாக நேசித்த ராமபிரான் தான் அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்பது, ராமாயணம் அறிந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்திரு க்கலாம்

இந்த துர்ச்சம்பவம் நடக்க காரணமாக இருந்த நிகழ்வுகள் மற்றும் ராம பிரான் தன் தம்பியான லஷ்மணனை இப்படி தண்டிக்க என்ன காரணமா யிருக்கும் என்பதை பற்றி இபொழுது பார்க்கலாம் ராம ராவண யுத்தம் முடிந்ததும் ராமபிரான் வெற்றியோடு அயோத்திக்கு திரும்பினார் அதன் பிறகு ஒரு அரசனாக நீதிதவராமல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எல் லோரையும் சமமாக மதித்து நீதிதவராமல் அரசாட்சி புரிந்தார் அவரு டைய அகண்ட ராஜ்யத்தை ராமரின் புதல்வர்களாகிய லவனும் குசனும்  ராமரின் தம்பிகளான பரதன் மற்றும் அவர்மனைவி மாண்டவிக்கு பிறந்த மக்களும் லக்ஷ்மணன் மற்றும் ஊர்மிளைக்கு பிறந்த மக்களும் சத்ருக் னன் மற்றும் அவர் மனைவி சுருதகீர்த்திக்கு பிறந்த மகன்களும் ராமரின் ஆலோசனை படி பலபிரிவுகளாய் பிரித்து ராஜ்யத்தை செவ்வனே ஆண்டு வந்தனர்.ஸ்ரீ ராமரும்  நாட்டு மக்களின் நலன்களுக்காக பல யாகங்களை செய்தார். அப்படி ஒரு நேரத்தில்தான் சீதையும் பூமா தேவியின் அழைப்பி ன் பேரில் பூமியில் சென்று மறைந்தார்.

இப்படி இருக்கையில் ஒருநாள் ராமரின் குலகுருவான வசிஷ்டர் அவரை சந்திக்க வந்தார். முக்கியமான சிலவிஷயங்களை பற்றி பேசவேண்டும் ஆகையால் தனிமையில் பேசவேண்டும் அபொழுது யாரும் குறிக்கிட கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்  இது மிகவும் ரகசியமான உரை யாடல் அதை யாரும் கேட்க்க கூடாது என கூறியதால் ராமர் தனது நம்பி க்கைகுரிய தான் பெரிதும் நேசித்த தன தம்பி லக்ஷ்மணனை அழைத்து அந்த அறைகதவுகளை பாதுக்ககுமாறு கூறினார் தன அனுமதி இல்லாம ல் அந்த அறையினுள் நுழைபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படும் என்ற ஆணையையும் லக்ஷ்மனைனிடம் தெரிவித்தார்
கதவுகளை லக்ஷ்மணன் பாதுகாத்து கொண்டு நிற்கையில் அங்கே  நம் முடைய கோபக்கார முனிவர் துர்வாசர் வருகிறார் தன்னுடையமுன் கோ பம் மற்றும் சாபங்களால் நன்கு அறியப்பட்டவர் இந்த துர்வாசமகரிஷி விதி விளையாட்டில் யாரும் தப்பமுடியாது என்பதை உணர்த்த வந்த துர்வாஷா மகரிஷி தான் உடனே ராமனை சந்திக்கவேண்டும் அதை ராம னிடம் தெரிவிக்குமாறு லக்ஷ்மனைனிடம் கூறினார் அவரை சமாதான படுத்தி அண்ணன் முக்கியமான ஒரு விவாதத்தை வசிஷ்ட முனிவருடன் விவாதித்து கொண்டு இருக்கிறார் அதனால் கொஞ்சம் காத்திருக்க கூறி னார் இதனால் கடும் கோபம் கொண்ட துர்வாசர் ராமனை பார்க்க தன் னை அனுமதிக்கவில்லை என்றால் அயோத்தியா மக்கள் அனைவரும் இயற்கை சீற்றம் கொண்டு இறந்துவிட சாபம் அளிப்பதாக  லக்ஷ்மணனை மிரட்டினார் துர்வாசரின் கொபதைகண்ட லக்ஷ்மணன்  குழப்ப நிலையை அடைந்தான் தன்னுயிரா இல்லை நாட்டுமக்களின் நலனா என குழப்ப மடைந்தான் முடிவில் தன்னுயிரை தியாகம் செய்ய முடிவெடுத்தார் ராமனின் அறைக்குள் நுழைந்து துர்வாசரின் வருகையை ராமபிரானிடம் தெரிவித்தார் தான் அளிக்கும் சொல்லுக்காக நன்றாக அறியப்பட்டவர் ராமர் சட்டம் இயற்றிய படி லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமே என கலங்கி நின்றார் ராமர் முடிவில் தான் கூறியதை போல் லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றினார் இப்படியாக முடிந் தது லக்ஷ்மணனது சோக முடிவு
ஆனால் இதே சம்பவம் வாய்வழி மரபுகளில் வேறுவிதமாக கூறபடுகிறது  ஒரு நாள்  ஸ்ரீராமரை தேடிக்கொண்டு ஒரு முனிவர் வந்தார். அவர் ராமரு டன் சிறிதுநேரம் தனியாக பேசவேண்டும் எனவும், இடையில் யாரும் தங்களது தனி அறைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் உத்திரவிட்டார். அவர்தான் காலதேவர் எனப்படும் யமன் .அதன்படி ராமர் அவரது தம்பி லக்ஷ்மணனை காவலாக வைத்துவிட்டு காலதேவரை பின்தொடர்ந்தார். யாராவது அப்படி அத்துமீறி நுழைந்தால் சாவை சந்திக்கநேரிடும் என்றும் எச்சரித்தார்.   காலதேவர் ராமரை சந்தித்து அவரது அவதாரத்தின் நோக்க ங்கள் நிறைவேறிவிட்டதாகவும் அவர், வைகுண்டம் செல்லும்காலம் வந்து விட்டது எனவும்  தான் அதை ஸ்ரீராமருக்கு ஞாபகப்படுத்த வந்திருப் பதாகவும் கூறினார் இப்படி ஸ்ரீராமரும் காலதேவரும் பேசிக் கொண்டிருக் கையில் அறைக்கு வெளியில் ஸ்ரீ ராமரை தாம்  உடனடியாக பார்க்க வே ண்டும் என்று லக்ஷ்மனுடன் சண்டையிட்டு கொண்டிருந்தார்  கடும் கோப க்கார முனிவர் துர்வாசர்,  லக்ஷ்மணன் எவ்வளவு மன்றாடியும் அவர் விடுவதாக இல்லை
ஸ்ரீராமரை பார்ப்பதில் பிடிவாதமாக இருந்தார் நமது துர்வாச முனிவர். உள்ளே தன்னை விடவில்லையானால் துர்வாச முனிவர், லக்ஷ்மணனு க்கு சாபம் அளிப்பேன் என்று கோபம் கொண்டதால் லக்ஷ்மணன் ஒன்றும் செய்வதறியாமல் குழப்பம் அடைந்தார். உள்ளே போனாலோ ஸ்ரீராமர் சொன்னது போல நமக்கு சாவு நிச்சயம். இவரை உள்ளே விடவில்லை என்றால் சாபம் நிச்சயம் என்ற நிலையில் லக்ஷ்மணனுக்கு இறைவனின் சித்தம் புரிந்தது. இது காலனின் விளையாட்டு. நாம் இந்த பூவுலகத்திலி ருந்து விடை பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்பதை முழுமை யாக புரிந்துக் கொண்டார். காலனின் விருப்பதிற்கேற்ப தன்னிச்சையாக சரயு நதிக்குள் புகுந்து ஆனந்த சேஷசயனம் எடுத்துக் கொண்டார் என்றும் கூறபடுகிறது
லக்ஷ்மணனது முடிவை தெரிந்து கொண்ட ஸ்ரீராமர்  பாசதுயறால் துடித் தார் தனக்கும் காலன் அழைத்ததை ஏற்றுக் கொண்டு தனது இந்த அவ தாரம் முடிந்தது என புரிந்துக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லி லக்ஷ்மணனை தொடர்ந்து சரயு ஆற்றில் இறங்கி இந்த அவதார த்தை நிறைவு செய்ய எண்ணினார்

உடனே தன தம்பிகளை அழைத்தார் பரதனுக்கு முடி சூடிவிட்டு தான் பூவுலகை விட்டு செல்லும் காலம் வந்து விட்டது என கூறி, ச‌ரயு நதியில் இறங்கி தனது இன்னுயிரை விட்டார்.

Leave a Reply