தேன் குடிக்கும் பிள்ளையார் – மெய்சிலிர்க்கும் அதிசய தகவல்கள் – அரியதோர் ஆன்மீக தகவல்
தேன் குடிக்கும் பிள்ளையார் – மெய்சிலிர்க்கும் அதிசய தகவல்கள் – அரியதோர் ஆன்மீக தகவல்
திருவலஞ்சுழி உங்களில் அநேகம் பேருக்கு தெரிந்து இருக்கலாம். வலம் புரி விநாயகர் அபரிமிதமான
அருள் அலைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு, நாடிவரும் பக்தர்க ளுக்கு வேண்டும் வரம் அருளும் ஆலயம். இந்த ஊருக்கு வெகு அருகி லேயே உள்ளது இந்த திருப் புறம்பியம்.
ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. அப்போது வருணன் கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டார். விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தால் ஏழு கடல்களையும், ஒரு கிணற்றுக் குள் அடக்கினார் என்று புராணம் கூறுகிறது.
ஆகவே பிள்ளையாருக்கு “பிரளயம் காத்த விநாயகர்” என்ற பெயர் ஏற் பட்டது. விநாயகரின் சிலாவுருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல் ஆகியவை தெரியும். சங்கு, சிப்பிகளாலேயே ஆன சிலை என்று கூறுகி ன்றனர்.
இந்த பிள்ளையாருக்குத் “தேன் குடிக்கும் பிள்ளையார்” என்ற பெயரும் உண்டு. இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். மற்ற நாட்களில் கிடையாது.விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன் அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனை யும், சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு டன் தேன் அவ்வாறு உறிஞ்சப்படுவதாக கணித்திருக்கி றார்கள்.
=> மாலதி