Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

… தொட்டாக் கூடப் போதும்… – நடிகர் ஜெய்சங்கரின் இன்னொரு முகம்

… தொட்டாக்கூடப் போதும்…  – நடிகர் ஜெய்சங்கரின் இன்னொரு முகம்

… தொட்டாக்கூடப் போதும்…  – நடிகர் ஜெய்சங்கரின் இன்னொரு முகம்

தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டு என்று எல்லோராலும் அன்பாக அழைக்க‍ப் படும் நடிகர் ஜெய்சங்கர், தான் கதாநாயகனாக  நடித்த‍ அத்தனை திரைப் படங்களிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை அமைத்து அதன்படி நடித்து, மக்க‍ளின் பேரன்பை பெற்ற‍வர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால் நடிகர் ஜெய்சங்கருக்கு இன்னொரு முகம் உண்டு என்றால் அதை உங்களால்

நம்ப முடிகிறதா? அந்த இன்னொரு முகத்தைப் பற்றி பலருக்கு தெரிந்தி ருக்க‍ வாய்ப்பில்லை.  

தான்சம்பந்தப்பட்ட எந்தஒரு விசேஷமென்றாலும், அதை ஆதரவற்றோர், அநாதை இல்லங்களில் கொண்டாடுகிற வழக்கம் ஜெய்சங்கருக்கு உண்டு. அநாதைக் குழந்தைகளுக்கான விருந்தைப் பிரபல மானவர்கள் கையால் பரிமாற வைப்பாராம்.

”எல்லாச் செலவுகளையும் நீங்க பண்ணிட்டு, அதை ஏன் அவங்க கையால தரச் சொல்றீங்க?” என்று ஒரு நண்பர் கேட்ட போது,

”நான் கூப்பிட்டு வர்ற வி.ஐ.பி-க் கள் யாரும் இந்த மாதிரி இடங்களுக்கு இதுவரைக்கும் வந்திருக்க மாட்டாங்க. அதனால, இது ஒரு வாய்ப்பா இருந்து, இந்த உதவி அவங்கள்ல சிலர் மனசைத் தொட்டாக் கூடப் போதும்... நாளைக்கு அவங்களும் இதுமாதிரி உதவிகளைச்செய்ய என் முயற்சி ஒரு தூண்டுதலா அமையும் இல்லியா, அதுக்காகத்தான்!” என்றாராம் ஜெய் சங்கர்

முகநூலிலிருந்து . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: