Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராத்திரியில சாப்பிடாதீங்க! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

ராத்திரியில சாப்பிடாதீங்க! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

ராத்திரியில சாப்பிடாதீங்க! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

ராத்திரியில சாப்பிடாதீங்க! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்! என்ன‍ங்க தலைப்பை படித்த‍வுடன் ஆச்ச‍ரியமாக இருக்கிறதா? அட ஆமாங்க! உண்மைதாங்க,

இராத்திரியில அதாவது இரவு நேரத்தில்

நம் உடல்நிலைக்கு தகுந்தவாறு உணவை எடுத்துக்கொள்வது. அவசிய மானதாகும். மீறி சில உணவுகளை இரவு நேரங்களில் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதனால் தான் இரவு நேரத்தில் தவிர்க்கவேண்டிய சில உணவுகள்

அசைவ உணவுகள்

இரவு நேரங்களில் நண்பர்களோடு வெளியில் சென்றால், ஏதேனும் அசைவ உணவுகளை ருசிபார்க்க வேண்டும் என தோன்றும். ஆனால் இந்த பழக்கத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஏனெனில் அசைவம் உணவுகள் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும்.

அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது.

காரம் மற்றும் எண்ணெய்

எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும்.

அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல, இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்சனைகள் ஏற்பட லாம்.

நீர்ச்சத்துள்ள உணவுகள்

இரவில் நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

நீரிழிவுக்காரர்கள் சுத்தமாக சாப்பிடவே கூடாது. பூசணி, புடலை, நீர்ச் சத்துள்ள காய்கறிகள், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் சாப்பிட்டா லும் இதே பிரச்சனைதான். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கும்.

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும். எனவே இது உங்களுக்கு காலை வேளைகளில் வயிற்று உபாதைகள் ஏற்பட காரணமாகிவிடும். என வே, இரவு நேரங்களில் காபி குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

மேற்கூறிய உணவுவகைகளை இரவுநேரங்க ளில் சாப்பிடாமல் இருந்தால், இரவுபொழுதி ல் தூக்க‍ம் நிச்ச‍யம், தூக்க‍ம் வந்தால் அப் புறம் என்ன‍ங்க இனிமையான நல்ல‍ நல்ல‍ கனவுகள் வரும்.  ஜமாய்ங்க‌

=> விசாலினி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: