Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஷேவிங் செய்யும் ஆண்களின் கவனத்திற்கு . . .

ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . .

ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . .

இன்றைய அவசர யுகத்தில் வேகவேகமாக ஆண்கள் ஷேவ் செய்கிறார் கள். அதனால் அவர்கள் முகத்தில் வெட்டுக்காயங்களும், தழும்புகள் தோன்றி, அவர்களது

முக அழகை கெடுத்து விடுகின்றன• ஆண்கள் ஷேவ் செய்யும்போது கவனிக்க‍ வேண்டிய அவசியமான குறிப்புக்கள் இவை.

ஷேவிங் செய்யும்முன், முகத்தை சுடுநீரில் கழுவி , துணியால் துடைக்காமல் அப்படியே விடவேண் டும். இதனால்மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளி வந்துவிடும்.

* பின் ஷேவிங் ஜெல்லை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஷேவிங்க்ரீம் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, ஷேவிங் செய்யும்போது முடி எளிமையா க வெளிவரவும் உதவும். ஒருவேளை உங்களுக்கு தாடி அதிகம் இருந்தா ல், ஷேவிங் க்ரீமை அதிகம் தடவி ஊற வையுங்கள்.

* அடுத்து ஷேவிங் மிஷின் கொண்டு, வளைவுகள் அதிகம் உள்ள இடங்களில் ஷேவிங் செய்யாமல், முதலில் மேடு பள்ளங்கள் இல்லாத கன்னங்களில் ஷேவிங்செய்யவேண் டும், இதனால் கடினமான இடங்களில் உள்ள முடி ஷேவிங் க்ரீம்மில் நன்கு ஊறி, ஷேவிங் செய்யும்போது பின் ஈஸி யாக வந்துவிடும். இதனால் சருமத்தில் எவ்வித வெட்டுக் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.

*ஷேவிங் செய்துமுடித்த பின்னர் குளிர்ந்தநீரால் முகத்தை கழுவவேண்டும். இதனால்சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங்க்கிற்கு பிறகு தடவவேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ்தடவி, சருமத்தில் ஈரப்பசையூட்டினால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

* முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5நிமிடம் ஊற வைத்து, பின் கழுவவேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

=ஜெய்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: