Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த

மூன்றை மட்டுமே நாம் சொல்வோம். சிலருக்கு கூடுதலாக ஒன்றிரண்டு தெரிந்திருக்க‍ வாய்ப்புண்டு. ஆனால், நமது காவல்துறையில் மொத்த‍ம் 16 பிரிவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன‌ என்பதை இதோ கீழே பட்டியலிடப்பட்டுள்ள‍ன•


1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defense and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offenses Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
முகநூலிலிருந்து . . .

4 Comments

  • குமார்

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீது இந்திய தண்டணை சட்டம 1860 ன் பிரிவு 495 ன் கீழ் நடவடிக்கை ஏடுக்கக் கோரி கடந்த 21-04-2015 அன்று சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் 30-04-2015 அன்று என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து எனது புகார் மனுவை நான் வாபஸ் பெற்றுக் கொண்டதாக என்னிடம் எழதி வாங்கிக் கொண்டு CSR 308/2015 என்னிடம் கொடுத்தனர் ஆகவே நான் 07-05-2015 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏனது வாழ்வுரிமை சம்மந்தமான பிரச்சனை காரணமாக எனது புகார் மனு மீது என்ன நடவடிக்கை மேற்கொளள்ளப்பட்டது என தகவல் கேட்டு விண்ணப்பித்தேன்எனது விண்ணப்பத்தை 08-05-2015அன்றுபெற்றுக்கொண்ட காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து இனி மேல் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு அனுப்பினால் உன்னை ரிமாணட் பண்ணிருவேண்டா சைக்கோ . மெண்டல் .என திட்டினார் ஆனால் தகவல் தரவில்லை ஆகவே நான் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் எண் மூன்றில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீதம் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தேன் என்னை விசாரணை செய்த நீதிபதி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு ஏவுரை அனுப்பினார் CRMP NUMBER :1017/2015 நாள் 14-05-2015 இந்த ஏவுரையில் இரண்டு மாதங்களுக்குள் உரிய விசாரணை செய்து சம்மந்தபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . ஆனால் கடந்த 07-07-2015 அன்று இந்திய தண்டணை சட்டம் 495 மற்றும்417 ஆகிய சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து என்னிடம் 10-07-2015 அன்று முதல் தகவல் அறிக்கையின் நகல் கொடுத்தனர்பிறகுநான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் வீட்டுக்கு சென்ற சாணார்பட்டி காவல் துறையினர் என் பெற்றோரிடம் ஏய்பொம்பளைங்க எத்தனை திருமணம் வேண்டுமானலும் செய்து கொள்ளலாம் என சட்டத்தில் உள்ளது உன் மகனை ஒழங்க RCS ல கையெழுத்து போட வரச் சொல் என தொந்தரவு செய்தனர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குஆதரவாக சாணார்பட்டி காவல் துறை செயல் பட்டு கொண்டுள்ளது எனக்கு இன்னும் குற்ற விசாரணை இறதி அறிக்கை நகல் வழங்கவில்லை இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த வித நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை ஆகவே திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடு மற்றும் சட்ட விரோத செயல்களை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள. இரா.பழனிக்குமார்

  • மெய்யப்பன் வே

    ஐயா வணக்கம் நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுகிறேன் தற்போது கோயம்புத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தன்னிச்சையாக செயல்பட்டு எனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான முறையை தவறான வழியில் செய்து கொண்டிருக்கிறார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இதனால் எனக்கு மன உளைச்சலும் மன வேதனையும் அதிகமாக உள்ளது என்பதை இதன் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

  • மெய்யப்பன் வே

    ஐயா வணக்கம் நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுகிறேன் நான் வசிக்கும் பகுதி தொழில் செய்யக்கூடிய பகுதி கணபதி யாகம் ஒரு சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று குளத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளேன் மற்றும் காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்தும் தபால் மூலமாகவும் புகார் அளித்துள்ளேன் ஆனால் இதுவரை எனக்கு எந்த ஒரு சட்ட ரீதியாக தகவல் கிடைக்கவில்லை எந்த விசாரணை மேற்கொள்ளவில்லை நான் என்ன செய்வது என் மன உளைச்சல் இந்த சட்டம் இந்த நீதிமன்றம் நீங்கள் கேட்கக் கூடிய அனைத்துக்கும் நான் கட்டுப்பட்டு நடந்து உள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் தயவு செய்து சட்ட ரீதியாக போராட்டத்திற்கு தகுந்த சட்ட நடவடிக்கை தேவை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் 9655741404

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: