Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

குற்ற‍வாளி என்று ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட‍தால், பதவிஇழந் து சிறைச்சென்ற ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் குற்ற‍மற்ற‍வர் என்று தீர்ப்பு வெளியாகி,

முதலமைச்ச‍ர் பொறுப்பில் அமர்ந்து விட்டார். இதோ அடுத்த‍ மாதம் ஆர். கே. நகர் இடை த்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறப்போகிறார். ஒரு வழியாக இந்த பரபரப்பு அடங்கியது.
ஆனால், தற்போது புதியதாக பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள‍து. அது என்ன‍வென்றால்,

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியா கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, பெரியகுளம் நகராட்சி தலைவ ராக இருந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்குமுன் பெரியகுளம் அருகேயுள்ள தேவ தானம்பட்டி கைலாசநாதர்கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ராஜாவின் தொல்லை காரணமாகத்தான் தற்கொ லை செய்துகொண்டதாக கடிதம் எழுதிவைத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், தான் முதல்வர் பதவியில் இல்லாத போது எவ்வளவு முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, குழு அமைத்து விசாரணை நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிகி றது. இந்த குழுவினரின் விசாரணையில், பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வ த்தின் சகோதரர் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்ச்செய்தி செய்திக்குறிப்பில் இருந்து . . .

Leave a Reply