Thursday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அசிடிட்டி பிரச்சனை உள்ள‍வர்கள், சாப்பிடக்கூடாத உணவுகள்

அசிடிட்டி பிரச்சனை உள்ள‍வர்கள், சாப்பிடக்கூடாத உணவுகள்

அசிடிட்டி பிரச்சனை உள்ள‍வர்கள், சாப்பிடக்கூடாத உணவுகள்

அசிடிட்டி பிரச்சனை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால்,

வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இதனால் வயிற்றில்வலி, வயிற்றில் உப்புசம்கூட ஏற்படு ம். சிலநேரங்க ளில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின்போது, அந்த சூழ்நிலை யை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புக ளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரி மான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது.

னவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி, செய்யலாம். மனதை லேசாக்கும் வகையில் இசையை கேட்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையை போக்கலாம் என்கின்றனர் மருத்து வ‌ நிபுணர்கள்.

சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்ப‍தன் மூலமும் இந்த அசிடிட்டி பிரச்சனையை தடுக்க முடியும்.

அசிடிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்க வேண் டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றா ல் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிட லாம்.

அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே, அதிக கொழுப்பு நிறைந்த உணவுக ளை தவிர்க்க வேண்டும்.

காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்குமாறாக கிரீன் டீ சாப்பிடலாம். காபின் நிறைந்த சாக்லேட்போன்ற உணவுப்பொருட்கள் இயற் கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்  கூடாது குறிப்பாக ஒயின் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply