Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! – அவசியமான அலசல்

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! – அவசியமான அலசல்

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! – அவசியமான அலசல்

வீட்டுமனை வாங்கும்போது சர்வே எண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே லே–அவுட் கொண்ட

மனைப்பிரிவில் மனை வாங்கும்போது சர்வே எண்ணும் ஒவ்வொருவரு க்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அந்த மனைப்பிரிவு முழுவதையும் மொத்தமாக வாங்கி இருந்தால் பிரச்சனை இல்லை. அதற்கு ஒரே ஒரு சர்வே எண்தான் இருக்கும். அதனை உறுதிசெய்து கொண்டால் போதும். ஆனால் அந்த மனைப்பிரிவில் ஒரு பகுதியை மட்டும் வாங்கினால் அதற்கு உட் பிரிவு சர்வே எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த சர்வே எண் சொத்தின் முழுமையான சர்வே எண்ணில் இருந்து பகுதியாக பிரிக்கப்பட்டு ஏ, பி, சி என்று அளவீடு செய்யப்பட்டிருக்கும். அல்லது இலக்கங்களை கொண்டிரு க்கும்.

எனவே நீங்கள் வாங்கும் உட்பிரிவு சர்வே எண்ணை உறுதி படுத்திக் கொள்வது அவசியம். பத்திரப்பதிவு செய்யும்போது அதனை தெளிவாக குறிப்பிடவேண்டு ம். அதில் இலக்கம் சிறிது மாறுபட்டாலும் பிரச்சனை யை ஏற்படுத்தி விடும். சர்வே எண்ணின் உட்பிரிவு மட்டுமின்றி மனைக் குரிய பட்டா எண், மனையின் உரிமையாளரின் பெயர், நிலத்தின் தன்மை, நிலத்தின் பரப்பளவு ஆகிய வற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் வாங்கும் லே–அவுட்டில் இருக்கும் மனைப்பிரிவுக்கு உரிமையா ளர் ஒருவர்தானா? என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமை யாளர்களிடம் இருந்து நிலத்தை வாங்கி மனைப்பிரிவு உருவாக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்ப டி ஒன்றுக்கும் மேற்பட்டஉரிமையாளர்கள் இருந்தால் அந்த மனைப்பிரிவுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே எண்கள் அடங்கி இருக்கும். ஒவ்வொரு சர்வே எண் ணுக்கும் தனித்தனியே வரைபடம் இருக்கும். அதுபோல் சில மனைகள் வேறு சர்வே எண்ணில் அமையும். உதாரணமாக ஒன்று முதல் 10 மனை கள் வரிசையாக இடம்பெற்றிருக்கும் மனைப்பிரிவில் சில மனைகள் இர ண்டு சர்வே எண்ணிலும் அமையும். எனவே சர்வே எண்ணை முழுமை யாக சரிபார்த்தபின் மனையை வாங்குவது சிறந்தது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: