Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறையொன்றுமில்லை! —- (வீம்புக்கு விமர்சிக்க‍லாமா!?)

குறையொன்றுமில்லை! —- (வீம்புக்கு விமர்சிக்க‍லாமா!?)

குறையொன்றுமில்லை! —- (வீம்புக்கு விமர்சிக்க‍லாமா!?)

{2015 ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில், நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்}

ஓராண்டிற்குள் நூறாண்டு சாதனைப் படைக்காவிட்டாலும்… ஒரு நூற்றா ண்டின் முன்னேற்றத்திற்கு தேவையான

தெளிவான தீர்க்க‍மான திட்ட‍ங்களை ஓராண்டிற்குள் வகுத்திருக்கிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி .

குறைவான அமைச்ச‍ர்கள்… நிறைவான செயல் பாடுகள்… என்ற இலட்சயத்துடன் மத்திய அரசின் அனைத்து நிர்வாகங்களும் அசாத்திய வேகத்துடன் இயங்குவதும்… அனைத்துத்துறை விவரங்களும் அன்றன்றே அப்டேட் செய்யும் வகையில் தனது நேரடிபார்வையில் ஆட்சி நடத்துவதும் மோடி(யின் ) மந்திரம்தான்!

தூய்மை இந்தியா, இத்தியாவில் உருவாக்குவோம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு, கூடுதல் உரிமை, விவசாயிகளுக்கு கடன் அட்டை, தனி தொலைக்காட்சி, எரிவாயு மானியம், உட்பட மானியங்கள் பயனாளிக்கு நேரடி யாய் சேருதல், எல்லாருக்கும் கடன்… குறைந்த பிரிமீயத்தில் வங்கி கணக்குள்ள‍ உனைவருக்கும் விபத்துக் காப்பீடு… இப்ப‍டி அடேங்கப்பா.. 365 நாட்களுக்குள் எத்த‍னை முக்கிய முன்னுதாரணத் திட்ட‍ங்கள்.. எல்லாத் திட்ட‍ங்களும் அறிவித்த‍ நாளன்றே அதிரடியாய் செய்ய‍ப்பட்ட‍து. நமோ மகிமையால் மட்டுமே!

இந்தியாவிற்கு இன்று பிரதமர் விஜயம் என்று எள்ளி நகை யாடலாம். வீம்புக்கு விமர்சிக்க‍லாம். ஆனால் அவரது 17 வெளிநாட்டு பயணங்களும் வெற்றிப் பயணங்களாகவும் புதுவிடியலுக்கான பயணங் ளாகவுமே அனைந்திருந்தன• சீனவுடன் பேசிக்கொண்டே சீனாவின் ஆதிக்க‍த்திற்கு ஆப்பு வைத்திருப்ப‍தும்… அமெரிக்காவை அப்ப‍டியே நம் பக்க‍ம் வளைத்துப் போட்டிருப்ப‍தும், பாகிஸ்தா னுக்கு பளீரென பதில் தருவதும் மூடு மந்திரமல்ல‍ மோடி(யின்) தந்திரம்.

திரைகடலோடியும் திரவியம் தேடு… திறமைகள் எங்கிருந்தாலும் கொண்டு வந்து சேரு என்ற வரிகளை வாய்ப்புக்களாக மாற்றி பொருளா தாரமும், தொழில் நுட்பமும் நம் தேசத்திற்குள் வந்து குவியக் காரணம் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்தான்.

41 ஆண்டுகளாக தீர்க்க‍ப்படாத தீர்க்க‍ப்படாத வங்க தேசத்தின் எல்லைப் பிரச்சனை தீர்ந்தி ருக்கிறது. சீனாவின் ஆக்கிரமிப்பு அடங்கிப் போயுள்ளது . நம்மைச்சுற்றியுள்ள‍ குட்டிநாடு களுக்கெல்லாம் கேட்காமலே கடன்கொடுத் து, இந்தியா என் நண்பேன்டா என்றுசொல்ல‍ வைத்திருப்ப‍து, பங்கு சந்தை நிமிர்ந்திருப்ப‍து, ஊழல்தொலைந்திருப்ப‍து, பொருளாதார இலக்கு சீரடைந்திருப்ப‍து… எல்லாமே ஓராண்டின் ஒப்ப‍ற்ற சாதனைகள் தான் ஆனாலும்…

அளவுக்கதிகமான அந்திய முதலீடு குவிப்பு ஒரு புறமும், இந்தியாவிலே யே உற்பத்தி என்ற கோஷம் மறுபுறமும் ஏன்? ஒண்ணுமே புரியவில்லை.

விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த‍ ஏன் இவ்வ‍ளவு அவசரம்… அக்கறை… விளங்கவில்லை. கருப்புப்பண வேட்டையில் முயலாய் கிளம்பி ஆமையாய் அடங்கி ஒடுங்கியது ஏன்? அறிய முடியவில்லை.

125 கோடி மக்க‍ளிடையே எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கிய நரேந்திர மோடியின் ஓராண்டு ஆட்சியை குறையொன்று மில்லை நமோ என்று பாராட்டுவோம். நல்லாட்சித்தொடர உரத்த‍ சிந்தனையுடன் வாழ்த்துவோம்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\|

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: