Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருந்து சீட்டில் புரியாதபடி எழுதும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

மருந்து சீட்டில் புரியாதபடி எழுதும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

மருந்து சீட்டில் புரியாதபடி எழுதும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

டாக்டர்கள் மருந்து சீட்டில் புரியாத படி எழுதுவதாக புகார் வந்தால் அவர்கள் மீது

நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித் துள்ளது.

டாக்டர்கள் நோயாளிக்கு கொடுக்கும் மருந்துச்சீட்டில் (பிரிஸ்கிரிப்ஷ ன்) உள்ள கையெழுத்து, மருந்துக் கடைக்காரர்க ளைத் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை. ஒரு சில டாக்டர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரர்களுக்கும் புரியாமல் நோயாளிக ளுகு தவறான மருந்துகளை கொடுத்து விடுகி ன்றனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்ப டும் சூழ்நிலை உள்ளது.

இதுபற்றி ஏராளமான புகார்கள் வந்ததால், டாக்டர்கள் மருந்து சீட்டில் பெரிய (கேபிடல்) எழுத்துக் களில் எழுத வேண்டும், மருந்து கம்பெனி யின் பெயரை எழுதாமல் மருந்தின் கெமிக்கல் (ஜென்ரிக்) பெயரை எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய திருத்த விதிமுறை களை கொண்டு வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை டாக்டர்கள் முறை யாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் பணியில் மருத்துவ கவுன்சில் ஈடுபட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய மருத்துவ கவுன்சில் (தமிழககி ளை) உறுப்பினருமான டாக்டர் K.செந்தில்  கூறியதா வது:

மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்தையும் மருத்துவ கவுன்சில் பலமுறை டாக்டர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆனால் டாக்டர்கள் கடைப்பிடிப்பதில்லை. டாக்டர் கள் வேண்டும் என்று புரியாதபடி எழுதுவதில்லை. அவர்களுக்கு அப்படி யே பழகிவிட்டதால் எழுதுகின்றனர். டாக்டர்கள் கொஞ்சம்நேரம் ஒதுக்கி பொறுமையாக எழுத வேண்டும். டாக்டர்கள் புரியாதபடி மருந்துச் சீட்டில் எழுதினால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட டாக்டர் எச்சரிக்கப்படுவார். அதே டாக்டர் மீண்டும் புரியாத படி எழுதுவதாக புகார் வந்தார், அவர்மீது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடவடிக் கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் (எஸ்.டிபி.ஜி.ஏ.) ஆலோசகரான க.இளஞ்சேரலாதன் கூறியதாவது:

டாக்டர்கள் மருந்து சீட்டில் மருந்து கம் பெனியின் பெயருக்குபதிலாக அதன் கெமிக்கல் (ஜென்ரிக்) பெயரை எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடை முறையில் சாத்தியமில்லை. பெரும்பாலான மருந்துக் கடைக்காரர்களு க்கு மருந்து கம்பெனியின் பெயர்தான் தெரியும். அந்த மருந்தின் கெமிக்கல் பெயர் தெரியாது. அப்படி யே தெரிந்திருந்தாலும், நோயாளி களுக்கு எந்த கம்பெனியின் மருந்தை கொடுக்கலாம் என்பதை மருந்துக் கடைக்காரர்கள் முடிவு செய்யும் நிலை ஏற்படும். இதன் மூலம் மருந்து கம்பெனிகளுக்கும், மருந்துக் கடைக்காரர்களுக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை மருந்து மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சி.அண்ணாமலை கூறியதாவது:

டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்து கம்பெனிகளின் பெயர்களை எழுதுவதாக வும், அதன்மூலம் டாக்டர்களுக்கும், மருந்து கம்பெனிகளுக்கும் இடையே மறைமுகமாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் டாக்டர்கள் மருந்து கம்பெனிகளின் பெயர்களை எழுதக்கூடாது. அதன் கெமிக்கல் பெயரை எழுத வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது நோயாளி களுக்கு எந்த கம்பெனி மருந்தை கொடுக்க வேண்டும் என்பதை மருந்துக்கடைக்காரர்கள்தான் முடிவுசெய்ய முடியும். இதன்மூலம் மருந்துக் கடைக்காரர்களுக்கு ம், மருந்து கம்பெனிகளுக்கும் மறைமுகமாக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எப்படி இருந் தாலும் டாக்டர்களும், மருந்துக் கடைக்காரர்களும் தான் நோயாளிகளுக்கு எந்த கம்பெனியின் மருந்தை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

=>சி.கண்ணன், தி இந்து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: