விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா?
விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா?
கடந்த 5 ஆண்டு காலமாக உங்கள் vidhai2virutcham.com இணையம் மிக சிறப்பான முறையில் தனது சொந்த படைப்புக்களோடு, பிற படைப்பாளி களின் படைப்புக்களையும்
மட்டுமல்லாமல், படித்த தகவல்கள் சிலவற்றையும் இங்கே பகிர்ந்து வருகிறது. உங்களது ஏகோபித்த ஆதரவுடன் இன்று வரை தெளிந்த சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது.
தற்போது மேலும் ஒரு சிறப்பாக விதைவிருட்சம் என்ற அச்சு வடிவ அரையாண்டு இதழும் கடந்த மார்ச் மாதம் எளிய முறையில் தொடங்கப்பட்டு வெளியிட ப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இதழில் உங்களது படைப்புக்களை வெளியிட மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறது.
ஆகையால் உங்களது படைப்புக்கள்
கவிதை
கதை/ சிறுகதை
ஆன்மீகம்
இலக்கியம்
மருத்துவம்
சமையல் குறிப்பு
பாலியல் மருத்துவம்
அரிய தகவல்கள்
உலகில் விநோதங்கள்
நீங்கள் சார்ந்திருக்கும் துறைகளில் நீங்கள் வல்லுநர்களாக இருந்தால், அத்துறையைப் பற்றிய தகவல்களை நீங்கள் அனுப்பலாம்.
உட்பட எந்த தலைப்பின்கீழும் இருக்கலாம். உங்கள் படைப்பு கவிதையாக இருந்தால், 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும். உங்களது படைப்பு கட்டுரையாக இருந்தால் 50 வரிகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களது படைப்புகள், (தமிழில் மின்னஞ்சல்) (இந்த வரியினை சொடுக்குக) பதிந்திருக்க வேண்டும் அல்லது (தமிழில் டைப் செய்ய _higopi) (இந்த வரியினை சொடுக்குக) என்ற இணையத்திற்கு சென்று தமிழில் பதிந்து, பின் அதனை அப்படியே பிரதி எடுத்து (காப்பி செய்து) உங்களது ஜிமெயில் மின்னஞ்சலில் ஒட்டி (பேஸ்ட் செய்து) அனுப்புங்கள்.
எக்காரணம் கொண்டும் உங்களது படைப்புக்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அட்டாச்மெண்ட் கொடுத்து அனுப்பக்கூடாது. மீறி அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
உங்களது படைப்புக்களை அடுத்த மாதம் ஜூலை 15 ஆம் தேதிக்குள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.