திருமண நாளும்! – பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்
திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்
தனது மகன் அல்லது மகளின் திருமணத்திற்கான நாள் பார்க்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான
பதினோரு (11) விதிகளை வகுத்துள்ளனர். இந்த விதிகளின் படி திருமணத்தை நிச்சயத்தால், மணமக்கள், சகல சௌபாக்கியங்க ளோடு, குழந்தைப்பேறு பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. …ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக் கூடாது.
– இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்ட பின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்லநாள் பார்த்து விடு வீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.
=>=>மா. மலர்
Most of us do not know the great things about our Hindu religion. It is very sad. This site is very useful to Hindus.