Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"நான் நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸாகவில்லை, ஆனால் . . . .!" – நடிகை கீர்த்தி சுரேஷ்

“நான் நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸாகவில்லை, ஆனால்  . . . .!” – நடிகை கீர்த்தி சுரேஷ்

“நான் நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸாகவில்லை, ஆனால்  . . . .!” – நடிகை கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த‍ நடிகை கீர்த்திசுரேஷ் இந்த திரைப்படத்தின்

படப்பிடிப்பின் போதே வரிசையாக பல திரைப்படங்களில் கமிட் ஆனார். அதனைத் தொடர்ந்து, இது என்ன மாயம், பாம்பு சட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர், மேலும் பல திரைப்படங்களில் நடிக்க‍ ஒப்புதல் வழங்கி அதற்கான கால்ஷீட்டை கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.  இத்தனை படங்களில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ள கீர்த்தி சுரேஷைப் பார்த்து மற்ற நடிகைகளே பொறாமைப்பட்டுத்தான் இருக்கிறார்களாம்.

சமீபத்தில் நடைபெற்ற‍ ரஜினி முருகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, இன்னும் நான் நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸாகவில்லை, ஆனால் இவ்வளவு படம் எப்படி கமிட்டானேன் என்றே தெரியவில்லை. எல்லா வற்றுக்கும் கடவுள் தான் காரணம். நான் நிறைய சம்பளம் கேட்பதாக செய்திகள் வந்தது. ஆனால் நான் இன்னும் 40 லட்சத்தை கூட தாண்டவில்லை. என் மீது தவறான அபிப்ராயம் உருவாகியுள்ளது என்று கூறினார்.

 

Leave a Reply